பிரிட்டன் : லெய்ஸ்டர் வகுப்பு மோதலுக்கு காரணமான சமூக வலைத்தளங்கள் !
பிரிட்டன் : லெய்ஸ்டர் வகுப்பு மோதலுக்கு காரணமான
சமூக வலைத்தளங்கள் !
கடந்த வாரம் இங்கிலாந்து லெய்ஸெஸ்டரில் இந்து மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் வகுப்பு மோதல் ஏற்பட்டது. கடந்த ஆகஸ்டு 28ம் தேதி, துபாயில் நடந்த ஆசியா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தானைத் தோற்கடித்தது. இதனைத் தொடர்ந்து லெய்ஸெஸ்டரில் இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த இந்து இளைஞர்களைக் கொண்ட ஒரு
குழு இந்திய வெற்றியை கொண்டாடியுள்ளனர். அப்போது, லெய்செஸ்டரில் வசிக்கின்ற பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இந்தியக் கொடியை அவமதித்ததாகவும் அவரை இந்துக்களைக் கொண்ட இளைஞர் குழுவினர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஹிந்து முஸ்லிம் சமூகங்களுக்கிடையே வகுப்புப் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் கிழக்கு லெய்செஸ்டரில் அடையாளம் தெரியாத சிலரால் ஒரு இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டது கோவிலுக்கு வெளியே ஏற்றப்பட்டிருந்த காவிக்கொடி கீழே இறக்கப்பட்டுள்ளது. இது லெய்செஸ்டர் வீதிகளில் தீவிர வன்முறை மோதலுக்கு வழி வகுத்துள்ளது.
![]() |
லெய்ச்செஸ்டரில் ... |
இந்த மோதல் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டது. பின்னர் இந்திய தேசியக் கொடிைய அவமதித்த அந்த நபர் இந்து சமூகத்தைச் சேர்ந்தவரோ அல்லது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரோ அல்ல எனத் தெரியவந்தது. இந்த வகுப்புப் பதட்டம் மோதலாக உருவெடுத்ததிலும் தீவிரம் அடைந்ததிலும் சமூக வலைதளங்கள்
முக்கிய பங்காற்றியுள்ளன. பிரிட்டனைச் சேர்ந்த பிபிசியின் செய்தியாளர் அப்திரஹீம் சயீத் இந்த வன்முறைச் சம்பவத்தை ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். அவரது ஆய்வில், இந்த வன்முறை தீவிரம் அடைய சமூக வலைதளங்கள் தான் காரணம் என்றும் ஹேஷ் டேக்குகளுடன் கூடிய டிவிட்டர் பதிவுகளில் வன்முறைக்கு காரணமான 50% டிவிட்கள் இந்திய டிவிட்டர்
அக்கவுண்ட்களில் தான் பகிரப்பட்டுள்ளது என்று கண்டறிந்துள்ளார்.
200K வரை பகிரப்பட்ட 50% டிவிட் பதிவுகள் இந்தியாவைச் சேர்ந்தவை என்கிறார் அந்த பிபிசி யின் அப்திரஹீம் சயீத். இன்னும், லெய்செஸ்டர் வகுப்பு மோதல் குறித்த இந்த டிவிட்களில் 50% சதவிகிதம் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ரீடிவிட் செய்யப்பட்டுள்ளது என்கிறார் சயீத்.
தொடர்ச்சியான டிவிட்டர் பதிவுகளில் #லெய்செஸ்டர், #ஹிந்துஸ் அண்டர் அட்டாக் மற்றும் #ஹிந்துஸ் அண்டர் அட்டாக் இன் யுகே ஆகிய மூன்று ஹேஷ் டேக்குகள் டாப்பில் இருந்தன என்று கூறும் சயீத், இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் லெய்செஸ்டர் வகுப்பு மோதல் தொடர்பாக #ஹிந்துஸ் அண்டர் அட்டாக் என்ற ஹேஷ் டேக்குகள் 97 சதவிகிதம் ரீ டிவீட் செய்யப்பட்டிருந்தது தான் என்கிறார். குறைந்தபட்சம் 500K வரையிலான ஆங்கில மொழியில் இருந்த டிவிட்களில் செப். 18 மற்றும் 19ம்
தேதிகளில் #லெய்செஸ்டர் என்ற ஹேஷ்டேக் உச்சத்தில் இருந்தது என்றும் கூறுகிறார் சயீத்.
![]() | |
பாதுகாப்பு பணியில் போலீசார் |
தொடர்ந்து, பிரிட்டன் மற்றும் இந்தியாவிற்கு அடுத்தபடியாக அதிக டிவிட்கள் மற்றும் ரீடிவிட்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன. இவை, வலதுசாரி அமைப்புகளின் கடும் போக்கு வாதிகள், செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் டிவிட் செய்யப்பட்டுள்ளன என்கிறார் சயீத்.
மேலும், #ஹிந்துஸ் அண்டர் அட்டாக் என்ற ஹேஸ்டேக்கின் டாப் டிவிட்டராக இருந்தவர் செப்டம்பர் மாதம் ஒரேய ஒரு பின் தொடர்பவருடன் தனது கணக்கை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் சயீத்.
சயீதின் ஆய்வுப்படி பார்த்தால் இந்தியாவிலும், பிரிட்டனிலும் இயங்கி வருகிற
இந்துத்துவாக்கள் மற்றும் இந்தியாவில் இயங்கி வருகின்ற ஹிந்துத்வ ஆன்லைன்செல்கள், மீடியா பிரிவுகள் தான் #ஹிந்துஸ் அண்டர் அட்டாக் என ஹேஸ்டேக்குகளை பரப்பி லெய்செஸ்டர் வகுப்புப் பதட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளன. உண்மையை சரி பார்க்காமல் சமூக வலைதள பதிவுகளை நம்பி அப்படியே அடுத்தவருக்கு பகிர்ந்துவிடும் நெட்டிசன்களால் வகுப்பு பதட்டம் அதிகரிக்கும் என்பதற்கு லெய்செஸ்டர் சம்பவம் ஒரு உதாரணமே!
-- ஃபைஸ்.
Makkal Report Weekly
Oct 1-7,2022
Comments
Post a Comment