அஸ்ஸாம்: சிறைக்கைதிகளில் 61 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள்
அஸ்ஸாம்:
சிறைக்கைதிகளில் 61 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள்!
அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டில், தண்டனை பெற்ற கைதிகளில் 61சதவிகிதம் மற்றும் விசாரணை கைதிகளில் 49 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் என இந்தியசிறைத்துறை புள்ளிவிபர ஆய்வு கூறுகிறது.
அஸ்ஸாம் மாநில மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 34 சதவிகிதத்தினர் உள்ளனர். ஆனால், இந்தக் கணக்குப்படி தங்கள் சதவிகிதத்தை விட 2 மடங்கு முஸ்லிம்கள் சிறைப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியினரால் ஆளப்படும் அஸ்ஸாம் மாநிலத்தில்
முறைப்படுத்தப்பட்ட அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட பாகுபாடு, தப்பெண்ணம் மற்றும்வன்முறைகளை முஸ்லிம்கள் எதிர் கொண்டு வருகின்றனர். இத்தனைக்கும் அரசியல் அமைப்புபாதுகாப்பு உத்திரவாதம் இருந்தும் அவர்களுக்கு இத்தகைய நிலை!
முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சுக்கு பேர் போன ஹிமான்தா விஷ்வா ஷர்மா தான்அஸ்ஸாமின் முதல்வராக இருக்கிறார். அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இன்னொரு அதிர்ச்சித் தரும் தகவல் என்னவென்றால், 2021 மே தொடங்கி ஷர்மா மாநில முதல்வராக பதவியேற்றவுடன் மாநிலம் முழுவதும் போலீஸ் நடவடிக்கை எடுத்த 161 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நடவடிக்கைகளில் 51 பேர் பலியாகியுள்ளனர். 139 பேர் கடுமையான காயமடைந்துள்ளனர். இதில்
பெரும்பாலானோர் மதச் சிறுபான்மையினர். கொல்லப்பட்டவர்களின் அடையாளம்காணப்பட்டதில் 32 பேர் முஸ்லிம்கள் எனது தெரியவந்தது!
குஜராத், உத்திரப்பிரதேசம், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் முஸ்லிம்களின் மக்கள் தொகை விகிதாசாரத்தை விட சிறைப்பட்டோர் விகிதாச்சாரம் கூடுதலாக உள்ளது. சமீபத்திய
புள்ளிவிபரங்கள் படி, 2021ல் ஒட்டுமொத்த இந்திய சிறைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் 30 சதவிகிதத்திற்கும் மேல் இருக்கிறார்கள். ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கின்படி இந்திய முஸ்லிம்கள் நாட்டில் 14.2 சதவிகிதம் இருக்கிறார்கள்.
2011 மக்கள் தொகையின் கணக்குப்படி, பல சிறைகளின் புள்ளிவிபரங்கள்- முஸ்லிம்கள், சீக்கியர்கள், தலித்கள் மற்றும் பழங்குடியின கைதிகளின் பிரதிநித்துவ விகிதாச்சாரம் அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட கூடுதலாகக் காட்டுகின்றன.
இந்தியாவில் 4 வகையான கைதிகள் இருக்கின்றனர்.
1. தண்டனை பெற்ற கைதிகள் (CONVICTS)
2. விசாரணைக் கைதிகள் (UNDER TRIALS)
3. சட்டப்பூர்வமாக காவலில் வைக்கப்பட்டவர்கள் (DETENVES)
4. மேற்கண்ட மூன்று வகையில் எதையும் சாராதவர்கள்.
2021 புள்ளி விபரப்படி ஹரியானா சிறைகளில் சட்டப்பூர்வ காவலில் வைக்கப்பட்ட கைதிகளில் 41 பேர் முஸ்லிம்கள். மேற்கு வங்கத்தில் 78.5, உத்திரப்பிரதேசத்தில் 56.7சதவிகிதம் என்பது குறிப்பிடதக்கது.
Comments
Post a Comment