ஆர் .எஸ் எஸ் அமைப்புடன் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு தொடர்பு ஆதாரத்துடன் கூறும் சீக்கியத் தலைவர் !
ஆர் .எஸ் எஸ் அமைப்புடன் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு தொடர்பு
ஆதாரத்துடன் கூறும் சீக்கியத் தலைவர் !
====================================================
2016ம் ஆண்டு, ஹைதராபாத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலராக இருந்து அரசியல்வாதியாக மாறிய முஹம்மது இர்ஃபான் காதிரி என்பவர், ஹைதராபாத்தின் கோஷா மஹால் தொகுதியின் பிஜேபி எம்எல்ஏவான ராஜாசிங் மீது போலீசில் புகார் அளித்தார்.காதிரி, ராஜாசிங்கின் மதவெறிப் பேச்சுக்கள் குறித்து பொதுவாக போலீசில் புகார் அளித்திருந்த போதிலும் தனது புகாருக்கு மூன்று வீடியோ ஆதாரங்களை உதாரணமாகசமர்ப்பித்திருந்தார். அதில் ஒன்றில் ராஜாசிங், பசு இறைச்சிக்கு எதிராக முஸ்லிம்களை மிக மோசமாக எச்சரித்திருந்தார். முஸ்லிம்கள் தொடர்ந்து இறைச்சிக்காக பசுவை அறுத்தால் அதே வழியில் முஸ்லிம்களும் படுகொலை செய்யப்படுவார்கள் என ராஜாசிங் அதில்அச்சுறுத்தியிருந்தார்.
5 ஆண்டுகளுக்குப்பின், டிசம்பர் 17, 2021ல், மாநிலத்தின் அரசியல்வாதிகளுக்கு
அதாவது, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை
பிரத்யேகமாக விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தால் ராஜா சிங் விடுவிக் கப்பட்டார். ராஜாசிங்கை விடுதலை செய்வதற்கு காரணங்களாக இரண்டு அம்சங்களை நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. முதலாவது, மெட்டீரியல் (பொருள்) ஆதாரத்தை சரியாக பதிவு செய்யும் செயல்முறையை போலீஸ் தவிர்த்திருக்கிறது. இன்னொரு முக்கிய காரணம், ராஜாசிங் எம்.எல்.ஏ மீது வழக்கு தொடுக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு முன்போ அல்லது அதன் பின்போ அரசாங்கத்திடம் காவல்துறை அனுமதி கேட்கவில்லை என்பது!
![]() |
| ராஜா சிங் எம் எல் ஏ |
குறிப்பிட்ட சில வழக்குகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மீது வழக்குத் தொடரஅரசு தரப்பிலிருந்து அனுமதி தேவை என்பது குறிப்பொடத்தக்கது.மேற்கண்ட வழக்கு , தாகூர் ராஜாசிங்லோக் என்ற முழுப்பெயரைக் கொண்ட டி.ராஜாசிங் மீதான ஒட்டுமொத்த 101 வழக்குகளில் ஒரு வழக்காகும்!
முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்புவாத வெறிப் பேச்சுகள் என்று வரும்போது அதில் ஒரு வழக்கமான குற்றவாளி அல்லது குற்றம் செய்வதையே வழக்கமாகக் கொண்ட (Habitual offender) பிஜேபி தலைவர் தான் ராஜா சிங். 101 வழக்குகள் ராஜாசிங்கிற்கு எதிராக பதிவாகியிருந்தும் இதுநாள்வரை ஒரே வழக்கில் தான் அவர் தண்டனையளிக்கப்பட்டிருக்கிறார். உண்மையில், ராஜசிங்கின் முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்புவாதப் பேச்சுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 100 வழக்குகளில் அவர் தண்டனையே இல்லாமல் விடுவிக்கப் பட்டிருக்கிறார். வழக்கமாக டெக்னிகல் கிரவுண்டில் தான் ராஜாசிங் தண்டனை இன்றி தப்பி வருகிறார். ஆக, சட்ட நுணுக்கங்களைத் தெரிந்த ஒரு புத்திசாலித்தனமான வழக்கறிஞர் குழு ஒன்றை வைத்துக் கொண்டுதான் வகுப்புவாத ஆட்டத்தை ஆடி வருகிறார் ராஜாசிங் அல்லது ராஜா சிங்கிற்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி தலைமையிலான அரசிற்கு சக்தி இல்லை என்றுதான் புரிந்து கொள்ள முடிகிறது!
இத்தனை ஆண்டு காலமாக, வகுப்புவாதச் சக்திகளை கடுமையாக ஒடுக்கும் அரசு என்கிற ஒரு இமேஜை டி.ஆர்.எஸ் அரசு தக்கவைத்து வந்திருக்கிறது. பிஜேபி மற்றும் இந்துத்வா சார்ந்த பல நிகழ்வுகளை டி.ஆர்.எஸ் அரசு பகிரங்கமாகவே தடுத்திருக்கிறது. இதற்கு மிக சமீபத்திய உதாரணம் , நகைச்சுவை கலைஞர் முனவர் ஃபருக்கியின் நிகழ்ச்சியை பிஜேபி மற்றும் இந்துத்வாவினர் கடுமையாக எதிர்த்த போதும் நிகழ்ச்சிக்குஅனுமதி கொடுத்தது. இத்தனைக்கும் பிஜேபியின் கடுமையான எதிர்ப்பு மற்றும் நிகழ்ச்சிக்கு அனுமதியளித்தால் நிகழ்ச்சி மண்டபத்தை தீயிட்டுக் கொளுத்துவோம் எனராஜா சிங் அச்சுறுத்தியிருந்த நிலையிலும் கூட நிகழ்சிக்கு அனுமதியளித்தது.
முந்தைய உதாரணமாக 2021 மார்ச் மாதம் நடந்த நிகழ்வை நினைவுபடுத்தலாம்.
![]() |
| முனவர் பாரூக்கி |
தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தின் பதட்டம் கொண்ட பகுதியாக அறியப்படும் பைன்ஸா நகரத்தில் வகுப்புக் கலவரம் வெடித்த பின்னர், உடனடியாக கலவரத்தை ஒடுக்கிய தெலுங்கானா போலீஸ் வலதுசாரி இந்துத்வா அமைப்பான ஹிந்து வாஹினியைச் சேர்ந்த 38 பேரைக் கைது செய்தது. (பொதுவாக வகுப்புக் கலவரத்தின் போது இரு தரப்பிலும் கைது செய்யும் போலீஸின் வழக்கமான நடைமுறையை கடைபிடிக்காமல் கலவரத்திற்கு காரணமானவர்களை போலீஸ் கைது செய்தது)
தெலுங்கானா அரசு அம்மாநில காவல்துறையின் துணை கொண்டு மாநிலத்தில் வகுப்புவாத மோதலை பெருமளவில் குறைத்திருக்கிறது. தெலுங்கானா போலீஸின்தரவுப்படி 2012ல், ஹனுமன் கோவில் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சைதாபாத் மற்றும் மதனப்பேட்டையில் வகுப்பு மோதல் நிகழ்ந்ததையடுத்து வகுப்புப் பதட்டம் நிலவியதால் ஹைதராபாத் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
மேற்கண்ட உதாரணங்கள் எல்லாமே பொதுவாக வகுப்பு மோதல் மற்றும் வன்முறையை ஒடுக்கும் அரசியல் துணிவு டிஆர்எஸ் அரசுக்கு இருப்பதை வெளிப்படுத்தும் அதேவேளை வன்முறை வெறியை தூண்டிவிடும் சட்டமன்ற உறுப்பினர்களை தண்டிக்கும் விஷயத்தில் அது கடைசி மைல் வரை பயணிப்பதில்லை என்று சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சிக்கின்றனர்.
ராஜாசிங்கின் குற்றப் பதிவுகள்:
==============================
ஹைதராபாத் பழைய நகரம் ஒரு குட்டி பாகிஸ்தான் என்று அழைத்தது முதல்
ரோஹிங்கியா முஸ்லிம்கள் பயங்கரவாதிகள், அவர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும்என்று கூறியது வரை மற்றும் 2018ல் பத்மாவதி என்ற பாலிவுட் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் கொளுத்தப்பட வேண்டும் என்று கூறியது வரை ராஜாசிங் சர்ச்சைக்குரியவராக அடிக்கடி மீடியாக்களால் வெளிப்படுத்தப்பட்டார். ராஜாசிங்கின் பற்றிய சமீபத்திய சர்ச்சை நகைச்சுவை கலைஞர் முனவ்வர் ஃபாருக்கி தனது பிரபலமான
நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்த ஹைதராபாத் வருவதற்கு எதிரான மிரட்டல் ஆகும். அதோடு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி கண்ணியக்குறைவாகப் பேசியதன் மூலம் எதிர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கும் காரணமானவர்.
இந்த ஆர்ப்பாட்டங்கள் பெரிய அளவில் வெளிப்பட்டதால் ஆகஸ்டு 25, 2022ல் முதல் முறையாக, ஒரு மக்கள் பிரதிநிதி PD (Preventive Detention) சட்டத்தின்படி ஹைதராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 45 வயது கொண்ட கோஷா மஹால் தொகுதி பாஜக எம்எல்ஏவான ராஜாசிங், ஆபத்தான செயல்களைத் தடுக்கும் தெலுங்கானா 1986ம் ஆண்டின் சட்டம் (PD )1ன் கீழ் அதே தினத்தில் கைது செய்யப்பட்டு செர்ரப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தார் காதிரி. அவை, ஜூலை 9, 2015, டிசம்பர் 28, 2015 மற்றும் பிப்ரவரி 15, 2016 ஆகிய தேதிகளில் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. காதிரியின் புகாரைத்தொடர்ந்து, இபிகோ 295 ஏ பிரிவின் கீழ் ராஜாசிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
![]() |
| Hyd Police : Representational Image |
பின்னர், ஏறக்குறைய 5 ஆண்டுகள் வரை இந்த புகாரின் நிலை குறித்து பலமுறை காவல்துறையிடம் காதிரி கேட்டு வந்தார். இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்தஅப்டேட்டை காதிரியிடம் கடைசி வரை சொல்லாமல்மறைத்து வந்தது போலீஸ்.மதச் சமூகங்களுக்கு மத்தியில் முரண்பாடுகளை தடுக்க இந்தியாவில் வெறுப்புப்பேச்சுக்கு எதிரான சட்டங்கள் உள்ளன. மத, மொழி, இன, பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் சமூக மோதலை உருவாக்கும் எவரையும் தண்டிக்கக் கோரும் அனுமதியை ஒரு குடிமகனுக்கு இந்த சட்டம் வழங்குகிறது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இதர சட்டங்களின் பல்வேறு சட்டங்கள் மூலம் கருத்துச் சுதந்திரத்திற்கு நியாயமான வரம்புகள் இட்டு வெறுப்புப் பேச்சை இந்திய அரசு தடை
செய்கிறது. வெறுப்புப் பேச்சில் ஈடுபடும் ஒருவர் பொதுவாக இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ அல்லது 295 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படுவார். இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் பிஜேபி எம்எல்ஏவான ராஜாசிங் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் அவர் தண்டிக்கப்படாமல் இருந்து வருகிறார். தொடர்ந்து அதே குற்றத்தில் ஈடுபட்டும் வருகிறார்.
![]() |
| அம்ஜத்துல்லாஹ் கான் |
“போலீஸ் வழக்குகளை மட்டுமே பதிவு செய்கிறது.ஆனால், அதன்படி குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தரும் வகையில் போலீஸ் அந்த வழக்கின் அடுத்த கட்டத்திற்கு நகருவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்கிறார் முஹம்மது இர்ஃபான் காதிரி. மேலும், “ராஜாசிங் மீது வழக்குத் தொடர தேவையான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து காவல்துறை பெறவில்லை என தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை திரும்பப் பெறச் சொல்லி பலமுறை நான்அச்சுறுத்தப்பட்டிருக்கிறேன். இந்த வழக்கை வாபஸ் பெற எனக்கு ரூ.25 லட்சங்கள்தருவதாகவும் சொல்லப்பட்டது. இந்த வழக்கு அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவருக்கு எதிரானது என்பதால் எங்களது பாதுகாப்பு குறித்து எனது குடும்பத்தினர் கவலை கொண்டனர். டி.ஆர்.எஸ் அரசு, ராஜாசிங்கை தண்டிக்க விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது” என்கிறார் இர்ஃபான் காதிரி.
சி.ஆர்.பி.சி என்கிற குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 196ன் கீழ், பிரிவு VI அல்லது இபிகோ என்கிற இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153 ஏ அல்லது 296 ஏ அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் 505ன் துணைப் பிரிவு 1ன் கீழ் தண்டனைக்குரிய எந்தக் குற்றத்தையும் நீதிமன்றம் எடுத்துக் கொள்ளாது. இவற்றில், மத்திய மற்றும் மாநிலஅரசாங்கத்தின் முன் அனுமதியைப் பெற்ற வழக்குகளைத் தவிர. இபிகோ பிரிவு 153 ஏ வைப் பொறுத்தவரை அது, மதம், இனம், பிறப்பிடம், குடியிருப்பு
ஆகியவற்றின் அடிப்படையில் இரு சமூகங்களுக்குள் பகைமை ஏற்படுத்துவதை குற்றம் என்கிறது. 295 ஏ ஒருவரது மதம் மற்றும் மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் எந்த வகுப்பாரின் உணர்வுகளை சீண்டும் நோக்கத்தோடு ஈடுபடும் தீய செயல்கள் குற்றம் என்கிறது.
ராஜாசிங்கிற்கு எதிரான பல வழக்குகள் இந்த பிரிவுகளுக்குள் அடங்குகின்றன. இவற்றில் காவல்துறை அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற முயற்சிக்கவில்லை அல்லதுஅவர்களுக்கு தேவையான அனுமதி அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை என்றுதான் புரிந்துக் கொள்ள
முடிகிறது.
மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரிக் (MBT) என்கிற அமைப்பின் செய்தித்
தொடர்பாளரான அம்ஜத்துல்லா கான் ராஜாசிங்கிற்கு எதிராக 19 வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்பானவை. இதில், “15 வழக்குகள் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி முடிக்கப்பட்டு விட்டது. இந்த வழக்குகளில் தேவையான வீடியோ ஆதாரங்கள் மற்றும் இதர விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்பும் இவ்வழக்குகள் ஆதாரமில்லை என்று முடிக்கப்பட்டு விட்டன. இந்த வழக்குகள் முடிக்கப்படுகின்றன என்ற தகவல் கூட மனுதாரரான எனக்கு சொல்லப் படவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின்னர் தான் இந்த வழக்குகள்
முடிக்கப்பட்டு விட்டன என நான் தெரிந்துக் கொண்டேன்” என்கிறார் அம்ஜத்துல்லா கான் !
நன்றி: தி நியூஸ் மினிட்
-ஃபைஸல்.
Makkal Report Weekly Oct1-7,2022




Comments
Post a Comment