கிறித்தவ பழங்குடியினரை இந்துமத்த்திற்கு மாறச்சொல்லி தாக்குதல் நடத்தும் இந்துத்வா சக்திகள் - மௌனம் காக்கும் அரசு! உண்மை அறியும் குழு அறிக்கை!!


 கிறித்தவ பழங்குடியினரை இந்துமத்த்திற்கு மாறச்சொல்லி தாக்குதல் நடத்தும் இந்துத்வா சக்திகள்
- மௌனம் காக்கும் அரசு!
உண்மை அறியும் குழு அறிக்கை!!


கிறிஸ்தவ ஆதிவாசிகளை வலுக்கட்டாயமாக இந்து வாழ்க்கைக்கு மாற்றுவதற்கான ஒரு உறுதியான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என, சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆதிவாசி கிறிஸ்தவ சமூகங்கள் இந்துத்துவா குழுக்களால் தாக்கப்பட்ட நாராயண்பூர் மற்றும் கோண்டகான் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்ற உண்மையைக் கண்டறியும் குழு கண்டறிந்ததாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட மாவட்டங்களிலுள்ள ஏராளமான நிவாரண முகாம்கள் மற்றும் கிராமங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடியுள்ளது உண்மை கண்டறியும் குழு. அதே போல் கிராம சர்பஞ்ச் மற்றும் குடியிருப்பாளர்கள் உட்பட கிறிஸ்தவர் அல்லாத ஆதிவாசிபளையும் இக்குழு சந்நித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் விருப்ப உரிமை மற்றும் மத சுதந்திரம் உள்ளது.  காட்டுமிராண்டித்தனமான இச்செயல்கள் தேசத்தின் முகத்தில் அறைந்தாற்போலுள்ளது

United Christian forum's media meet (Rights activist John Dayal; Michael Williams, president of the United Christian Forum; and Irfan Engineer)

ஆதிவாசிகள் தங்களுக்கென சொந்த பூர்வீக வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளனர், மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ளபடி அச்சமின்றி தங்கள் நம்பிக்கையைத் தேர்ந்தெடுப்பது அவர்களின் சட்டப்பூர்வ உரிமையாகும் என்று கூறும் இக்குழு, அரசியல் மற்றும் கலாச்சார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தவிர, மாவட்ட ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட நாராயண்பூர் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடனும்  உரையாடியதாகக்  தெரிவித்துள்ளது.

"டிசம்பர் 9, 2022 முதல், டிசம்பர் 18, 2022 வரை நாராயண்பூரில் உள்ள சுமார் 18 கிராமங்களிலும், கோண்டகானில் உள்ள 15 கிராமங்களிலும் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு சுமார் 1,000 கிறிஸ்தவ ஆதிவாசிகளை அவர்களது சொந்த கிராமங்களில் இருந்து வெளியேற்றியுள்ளதாக உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை கூறுகிறது.  ஊரை விட்டு வெளியேறியவர்கள், தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிட்டு இந்து மதத்திற்கு மாறுமாறும்  தவறினால்  அவர்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் அல்லது மரணம் உட்பட மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தப்பட்டுள்ளனர்


  பல கிறிஸ்தவ ஆதிவாசிகள் மூங்கில் தடிகள், டயர்கள், கம்பிகள் போன்றவற்றால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் 20க்கும் மேற்பட்டோர்  தோள் எலும்பு முறிவு போன்ற கடுமையன காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யுனைடெட் கிறிஸ்டியன் ஃபோரம் என்ற அமை
ப்பின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த இந்த உண்மை அறியும் குழு தயாரித்த ஆவணப்படத்துடன் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது. சத்தீஸ்கரின் குண்டகன் மற்றும் நாராயண்பூர் மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அனுபவித்த வன்முறைச விளைவுகளை ஆவணப்படம் முன்வைத்தது.

"நாங்கள் இயேசுவை வணங்கியதால் ,தாக்கப்பட்டோம்” என்று பாதிக்கப்பட்ட ஒருவர் ஆவணப்படத்தில் கூறுகிறார.  இது குறித்து நாராயண்பூரில் உள்ள பழங்குடியின பெண் ஒருவர் கூறும்போது, ​​“சர்ப்பஞ்ச்( கி
ராம சபைத் தலைவர்) இதைத் தொடங்கினார்.  பின்னர், மற்றவர்களும் சேர்ந்து கொண்டனர். என் கணவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்கிறார்.  பல கிராமவாசிகள் தாங்கள் இந்து மதத்திற்கு ‘திரும்பவும் பழங்குடி கலாச்சாரத்தைப் பின்பற்றவும் கிறிஸ்தவத்தை கைவிடவும் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றனர்.  அரசியல் சட்டத்திற்கு முரணான இந்தமிரட்டல்  பெரும்பாலும் அதிகாரிகளாலும் மற்ற கிராம உறுப்பினர்களாலும்,குறிப்பாக ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களாலும் செய்யப்பட்டது என்கிறது யுசிஎஃப்.

கிராம மக்கள் பலமுறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முயற்சித்தாலும் அதிகாரிகள் அலட்சியமாகவும் செயலற்றதாகவும் இருந்ததை உண்மை கண்டறியும் குழு கண்டறிந்துள்ளது.

  “இவ்வளவு காலமாக நாங்கள் இங்குதான் வாழ்ந்து வருகிறோம்.  எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் வீட்டிற்கு செல்ல மாட்டோம்” என்று ஒரு கிராமவாசி ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 9 அன்று இரு மாவட்டங்களிலும் வன்முறை வெடித்ததாக உண்மை கண்டறியும் குழு கூறுகிறது. அன்றுமுதல் டிசம்பர் 18 வரை கிறிஸ்தவ பழங்குடியினர் சட்டவிரோதமாக தங்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  சத்தீஸ்கரில் உள்ள சுமார் 40 கிராமங்களில் இருந்து 1000 ஆதிவாசிகள் கிறிஸ்துமஸுக்கு முன் வலுக்கட்டாயமாக தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Attack on tribal Christians

"சிம்ரி கிராமத்தின் சர்பஞ்ச் கிராம மக்களை கிறித்துவத்தை விட்டு அல்லது கிராமத்தை விட்டு வெளியேறுமாறு கோரினார் என்றும், இந்த சம்பவம் மட்டும் ஒரு சான்றல்ல;  குண்டகானில், பலர் தங்கள் வீடுகளை விட்டு பைக்குகளிலோ அல்லது நடந்தோ வெளியேறி அருகிலுள்ள தேவாலயத்திற்கு இடம்பெயர வேண்டியிருந்தது" என்கிறார் இஞ்சினியர் இர்ஃபான்.“சத்தீஸ்கரில் கிறிஸ்தவ பழங்குடியினரை வலுக்கட்டாயமாக இந்து மதத்திற்கு மாற்றுவதற்கான பிரச்சாரம் நடந்து வருகிறது என்று கூறும் யுசிஎஃப்,   இது, அக்டோபரிலேயே தொடங்கியதாகவும், கிறிஸ்துமஸ் சமயத்தில் இது தொடர்பான வன்முறைகள் அதிகரித்ததாகவும்  கூறுகிறது.

அரசு இயந்திரத்தின் ஊனமுற்ற தன்மையை அவர்கள்ஆவணப்படத்தில் வலியுறுத்துகின்றனர் பிர்னூர் காவல் நிலைய ஆய்வாளர் பழங்குடியினர் ஒன்று சேர்ந்து புகார் அளித்தும் புகார் பதிவு செய்ய மறுத்திருக்கிறார்.  “இரு தரப்பிலும் தவறு இருப்பதாக நிர்வாகம் தொடர்ந்து கூறியது.  பழங்குடியினரின் ஒரே தவறு கிறிஸ்தவத்தை நம்புவது என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் இர்ஃபான் .

கூடுதலாக, குழுவின் முக்கிய அவதானிப்பு நாராயண்பூர் மற்றும் குண்டகான் அகதிகள் முகாம்களின் பரிதாபகரமான நிலைமைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை முன்னிறுத்துகிறது

இடம்பெயர்ந்த கிறிஸ்தவர்களுக்கு முறையான தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு மற்றும் இத்தகைய வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.

Displaced Tribal Christians In Temporary Camps

UCF இன் தலைவர் மைக்கேல் வில்லியம்ஸ், அரசு இணையதளங்களில் எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில், பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்களின் அடிப்படை விவரங்களைக் கேட்டபோது நிர்வாகம் அமைதி காத்ததாகக் குறிப்பிட்டார். " எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாராயண்பூரில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கூறியதாகவும் இருப்பினும், அதே பகுதியில் உள்ள ஒரு தேவாலய உறுப்பினருக்கோ அல்லது பாதிக்கப்பட்டவருக்கோ இந்த எஃப்ஐஆர்கள் பற்றி தெரியாது. சத்தீஸ்கர் முதல்வரைச் சந்தித்தோம்.  விரைவில் கைது நடவடிக்கைகள் இருக்கும  அனைத்து தகவல்களும் கிடைக்கும் என உறுதியளித்தார்.  ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது.  எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை மேலும்.  சத்தீஸ்கர் இதுபோன்ற ஒரு சம்பவத்தைக் கண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது"என்கிறார். வில்லியம்ஸ்.

பிரபல மனித உரிமை ஆர்வலர் ஜான் தயாள், வன்முறைச் சம்பவம் பற்றிய தரவுகள்  மற்றும் அரசாங்கத்தின் போக்குகளுகளை அழுத்தமாகக் கூறுகிறார். "அரசு மறுக்கின்ற கட்டத்தில் உள்ளது.  கிறிஸ்தவர்கள் போன்ற மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடர்பான தகவல்கள் தேசிய குற்ற பதிவுத்துறையின் தரவு பதிவுகளில் இருந்து அழிக்கப்பட்டுள்ளன.  சத்தீஸ்கர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எடுத்துக் கொள்ளாததைக் குறிப்பிடும்போது, “மாநிலத்தை யார் ஆளுகிறார்கள் அல்லது நாட்டை ஆள்கிறார்கள் என்பது முக்கியமல்ல.

\

பா.ஜ.க என்றால்,   ஆர்.எஸ்.எஸ்.  குண்டர்களுக்கு அவர்கள் செயலூக்கம் தருகிறார்கள். அது காங்கிரஸ் என்றால்.  இந்து வாக்கு வங்கியை இழக்காமல் பின்வாங்குகிறார்கள்." என்று கூறும் ஜான் தயாளின்    பகுப்பாய்வின்படி, நாராயண்பூர் மாவட்டம், குண்டகான் மற்றும் சத்தீஸ்கரின் பிற பகுதிகளில் உள்ள குற்றவாளிகள் பழங்குடியினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.கார்ர்கள் தான்!
இறுதியில், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டன, மேலும் இந்து மதத்திற்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்ட இடம்பெயர்ந்த கிறிஸ்தவ பழங்குடியினர் நீதித்துறை நடவடிக்கைகள் மற்றும் நீதியை வரவேற்கிறார்கள் என்று கூறி   செய்தியாளர் சந்திப்பு நிறைவுற்றது.

Comments