இன்றைய இந்தியாவில் முஸ்லிமாக இருப்பது குற்றம்! °என்ஐஏ ரெய்டும் முஸ்லிம்களும்!!

 இன்றைய இந்தியாவில்
முஸ்லிமாக இருப்பது குற்றம்!
°என்ஐஏ ரெய்டும் முஸ்லிம்களும்!!



29 டிசம்பர் 2022 அன்று, கேரள மாநில நெடுஞ்சாலை வழியாக அதிகாலை 4 மணியளவில் NIA அதிகாரிகளின் வாகனம் ஒன்று உள்ளூர் போலீஸ் வாகனத்துடன் சென்று கொண்டிருந்தது.  சில மீட்டர்களுக்குப் பிறகு, வாகனம் வலதுபுறம் திரும்பி ஒரு கிராமப்புறத்தில் சாக்கடைகளுடன் காணப்பட்ட சாலையில்   சென்று  இரண்டு மாடி கான்கிரீட் வீட்டின் முன் நின்றது, அங்கு அருகிலிருந்த ஒரு பெரிய மரத்தில் அமருவதற்கான இடம் தேடிக்கொண்டிருந்த இரண்டு வெள்ளை நிற  கொக்குகள் தவிர மற்றவர்கள்  அனைவரும் தன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர்.

வாகனத்தில் இருந்து இறங்கிய அதிகாரிகள், அந்த வீட்டின்  காலிங் பெல் செயல்படாததால், வீட்டின் பிரதான கதவுக்கு நடந்து சென்று கதவை தட்டினர்.   பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் செயல்பாட்டாளரான அன்வரின் வீடு அது!

அனவரும் அவரது மனைவியும் வீட்டிற்குள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தனர்.  அதிகாரிகளுக்கு  பதில் வராததால், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் படுக்கையறை ஜன்னல் அருகே சென்று அதை தட்ட ஆரம்பித்தனர்.
NIA Raid in Kerala

 ஜன்னல் தட்டும் சத்தத்தால் திடுக்கிட்டு விழித்த நடுத்தர வயதுப் பெண், வழக்கத்திற்கு மாறான  நேரத்தில் யாரோ மரணச் செய்தியை அறிவிப்பதற்காக தான் தங்கள் வீட்டிற்கு வந்ததாக முதலில் நினைத்தார்.  கணவனை தூக்கத்திலிருந்து எழுப்பினார்.உள்ளூர் சப்-இன்ஸ்பெக்டர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கதவைத் திறக்கச் சொன்னார்.


"அமைப்பின் தடையைத் தொடர்ந்து, விரைவில் எங்கள் வீட்டிலும் ரெய்டு நடக்கலாம் என்ற உள்ளுணர்வு எனக்கு எப்போதும் உண்டு.  இன்றைய நாள் நடக்கும் என்றுதான் நான் தினந்தோறும்  நினைத்தேன்.”என்கிறார் அன்வரின் மனைவி.

Advocate: Thushar Nirmal Sarathy (Right)


அன்வர் சட்டை அணியாமல் வாசலுக்கு விரைந்தார்.  அவர் தனது மார்பை மறைக்காமல் அந்நியர்களிடம் பேசக்கூடாது என்பதில் மிகவும் அக்கறை கொண்டிருந்ததால், அவர் மிகவும் சங்கடப்பட்ட நிலையில் அதிகாரிகளை எதிர்கொண்டார்.

NIA நீதிமன்றங்களில்   பல வழக்குகளில்  பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் துஷார் நிர்மல் சாரதி, " தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்படும் பல வழக்குகளில் நள்ளிரவில் வழக்கத்துக்கு மாறன நேரங்களில்   வீடுகளில் சோதனை நடத்தப்படுவது பொதுவான முறையாக இருக்கிறது.

தனிமனித சுதந்திரம்  ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை.  ஒரு குடும்பத்தின் அமைதியான உறக்கத்தை சீர்குலைப்பதும், நேரங்கெட்ட நேரங்களில் அவர்களது படுக்கையறைக்குள் நுழைவதும் அவர்களின் தனியுரிமையை மீறுவதாகும்.  இத்தகைய சோதனைகள் ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகள் மீதான அத்துமீறல்" என்று குறிப்பிட்ட அவர், "இந்தச் செயல்கள் சட்டரீதியாக சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான பிரச்சினையாக கருதப்படுகின்றன." என்கிறார்.

அதே நேரத்தில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், கேரள காவல்துறையின் ஆதரவுடன், கேரளா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் செயல்பாட்டாளர்களின் 56 இடங்கள், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.  எர்ணாகுளத்தில் 8 இடங்களிலும், கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரத்தில் தலா 3 இடங்களிலும், மலப்புரம் மற்றும் ஆலப்புழாவில் தலா 4 இடங்களிலும், வயநாட்டில் 6 இடங்களிலும் மற்றும் ஒரு சில மாவட்டங்களிலும் என்ஐஏ  சோதனை நடத்தியது.

NIA Searches on 56 Locations in Kerala


ஊடகங்களின் செய்திப்படி, சோதனையைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.   இந்த சோதனையானது, தடை செய்யப்பட்ட பின்னரும் கூட, PFI செயற்பாட்டாளர்களால்  ரகசியமாக அமைப்பு செயல்பட்டு வருவதாக  வும,  பயங்கரவாத நிதி மற்றும் குற்றவியல் சதியில் ஈடுபடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டதாகும்.

NIA அதிகாரிகள் அன்வரின் வீட்டில் சோதனை நடத்துவதற்கான நீதிமன்ற உத்தரவைக் காட்டி அவரை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கோரினர்.  'என்ஐஏ கொச்சி அலுவலகத்தால் பதிவு செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை வழக்கு தொடர்பாக எனது வீடு சோதனையிடப்படும்'  என்று  நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அதில் கையெழுத்திடுமாறும்  கூறப்பட்டிருந்த்து," என்றும் அன்வர் கூறுகிறார்.

இதற்கிடையில், அன்வரின் மனைவியின் மனதில் கலவையான உணர்வு ஓடிக்கொண்டிருந்தது.  கணவன் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவான் என்று பயந்த அவர், அவரது விடுதலைக்காக முடிவில்லாத நாட்களுக்காக காத்திருக்க வேண்டும். என்ற பயம் அவர் மனதில் படரந்தது.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடையை தொடர்ந்து கேரளாவில் பிஎஃப்ஐ செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.ரெய்டுக்கு வந்த என்ஐஏ குழுவில் மூன்று அதிகாரிகள் மற்றும் சாட்சிகளாக   ஒரு மத்திய கலால் ஊழியர் மற்றும் ஒரு சுங்க ஊழியர் என 5 பேர் இருந்தனர்.அன்வர் வீட்டின் அலுவலக அறை, சாப்பாட்டு அறை, ஹால்,  மூன்று படுக்கையறைகள் மற்றும் மொட்டை மாடி  என வீட்டின் மூலை முடுக்குகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

   " சோதனையின் போது பக்கச்சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்த, சாட்சி நம்பகத்தன்மை கொண்ட நபர்களாகவும் உள்ளூர் வட்டாரத்தில் நன்கு பரிச்சயமானவராகவும் இருக்க வேண்டும்.  ஆனால் என்ஐஏ நடத்திய பெரும்பாலான சோதனைகளில், சாட்சிகள் முக்கியமாக மத்திய அரசு ஊழியர்களாக அவர்கள் முதல் முறையாக உள்ளூர்க்கு வருகை தருகிறவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் விசுவாசம் அரசு எந்திரத்தின் மீது இருக்கும். மேலும் ஆதாரங்களை சிதைப்பதற்கும் அல்லது புதியவற்றை விதைப்பதற்கும் கூட வாய்ப்புகள் உள்ளன," என்கிறார் வழக்கறிஞர் துஷார்.


அதிகாரிகள் நல்ல முறையில் நடந்து கொண்டதை கணவன், மனைவி இருவரும் ஒப்புக்கொண்டனர்.  சோதனை நடந்து கொண்டிருந்தபோது, ​​அன்வரின் மனைவி ஃபஜ்ர் தொழுகையை தொழ, உணவு சமைக்க, முற்றத்தை சுத்தம் செய்யவும், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவும் அனுமதிக்கப்பட்டார்.  எவ்வாறாயினும், இந்த வகையான நடத்தை அவரது அமைப்பும் மற்றவர்களும் நீதிமன்றத்தில் செய்த தலையீடுகளின் விளைவாகும் என்று கூறுகிறரர் அன்வர்

இதற்கு முன்பு போலீசார் வீடுகளை முற்றுகையிட்டது, சுவர் ஏறி குதிப்பது, அத்துமீறி நுழைந்து தகர்ப்பது, கதவுகளை அடித்து நொறுக்குவது, குடும்ப உறுப்பினர்களை துஷ்பிரயோக வார்த்தைகளால் பேசுவது போன்ற அநாகரிக  சம்பவங்கள் பல நடந்துள்ளன.  நீதிமன்றத்தில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களை நீதிமன்றத்தில் எதிர்த்துப் பேசிய பிஎஃப்ஐ மற்றும் பல்வேறு நபர்களின் முயற்சியால், அதிகாரிகள் நாகரீகமாகி வருகின்றனர், ”என்று மேலும்  கூறுகிறார் அன்வர்.

அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை  பார்வையிட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, இந்திய துணைக் கண்டத்தின் முக்கிய முஸ்லீம் அறிஞரான அபுல் அலா மௌதூதி எழுதிய ஜிஹாத் என்ற புத்தகத்தில் அதிகாரியின் கண்கள் பதிந்தன.  "ஏன் இப்படிப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறீர்கள்?" என்று அதிகாரி அன்வாரிடம் கேட்க...





அதற்கு, "தகழி சிவசங்கர பிள்ளையின் ‘காயர்’ நாவலையும் விருத்த மஞ்சரியையும் ஏன் படிக்கிறேன் என்று ஏன் நீங்கள் கேட்கவில்லை.   அப்படிப்பட்ட புத்தகங்களும் என்னிடம் உள்ளன" பதிலளித்திருக்கிறார்   அன்வர்.

மேலும், "இஸ்லாமிய தலைப்புகளைக் கொண்ட புத்தகங்களை எடுப்பதில் அதிகாரிகள் மும்முரமாக இருந்தனர்.  “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் அதன் தலைவர்களும் இந்தியாவில் ஒரு இஸ்லாமிய அரசை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டை  பொதுவெளியில்  நிலைநிறுத்துவதற்கான முயற்சியாக இது அமைந்துள்ளது.  தங்களின் இந்த கூற்றை நிரூபிக்கும் வகையில் அதிகாரிகள் நீதிமன்றத்தில் இத்தகைய புத்தகங்களை சமர்ப்பிப்பார்கள்'' என்று கூறும் அன்வர், புத்தகத்தின் முன் மற்றும் பின் பக்கத்தை மட்டுமே கையொப்பமிடவும், பார்க்கவும்    அதிகாரிகள் அனுமதிப்பதால், புத்தகங்களில் போலி ஆதாரங்களை அல்லது குற்றஞ்சாட்டக்கூடிய உள்ளடக்கத்தை எழுதுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கிறார்.

அன்வரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட புத்தகங்களில் பிரபோதனம் வார இதழின் பதினைந்து பிரதிகள், தேஜஸ் இதழின் பதினைந்து பிரதிகள், அபுல் அலா மௌதூதி எழுதிய ‘ஜிஹாத்’, முன்னாள் PFI தலைவர்கள் இ. அபூபக்கர் மற்றும் ஏ சயீத் எழுதிய புத்தகங்கள் ஆகியவை அடங்கும்.  பிரபோதனம் முஸ்லிம் அமைப்பான ஜமாத் இ இஸ்லாமியின் அதிகாரப்பூர்வ வார இதழாகும்.அதேபோல, தேஜஸ் பிஎஃப்ஐயின் மாதமிருமுறை வெளியீடாகும்.  "இந்த புத்தகங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட நூல்கள் அல்ல. இவை கடைகளில்  கிடைக்கின்றன" என்கிறார் அன்வரின் மனைவி.

36 வயதான இஸ்மாயில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஃபஜ்ர் தொழுகையின் போது உள்ளூர் மஸ்ஜிதில் இருந்து அன்வர் வீட்டில் சோதனை நடந்ததைப் பற்றி அறிந்தவர், விவரங்களைப் பெற சுமார் 50 மீட்டர் தொலைவில் வசிக்கும் அன்வரின் சகோதரரை அழைத்தார்.  “ரெய்டு பற்றிய செய்தி கிடைத்ததும் நான் சம்பவ இடத்திற்கு விரைந்தேன்.  ஆனால் உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் என்னை வாயிலில் நிறுத்தி, என்ஐஏ சோதனை நடத்தப்படுவதால் நுழைவு தடைசெய்யப்பட்டுள்ளது என்று என்னிடம் சொன்னார்கள், ”என்று அன்வரின் சகோதரர் இஸ்மாயிலிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.


இது அரசின் மற்றொரு தந்திரம்.  இந்த அமைப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்டது.  அதன் தொண்டர்கள் அல்லது தலைவர்கள் யாரும் தங்கள் வீட்டில் குற்றஞ்சாட்டக்கூடிய ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால், வைத்திருக்க மாட்டார்கள் என்பது வெளிப்படையானது, ”என்கிறார் இஸ்மாயில்.

பொதுமக்களிடையே அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துவதே இந்த சோதனையின் முக்கிய நோக்கம் என்று வழக்கறிஞர் துஷார் கருத்து சொல்கிறார்.  “போலீஸ் படைகளுடன் ஒரு வீட்டைச் சுற்றி வளைப்பதும், உள்ளூரில் ஒரு பயங்கரவாதமான சூழலை உருவாக்குவதும் அண்டை வீட்டாரின் மனதில் பயத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தக்கூடும்.  சில மணிநேரங்களில் ரெய்டு முடிந்தாலும், பாதிக்கப்பட்ட நபர் தனது வாழ்நாள் முழுவதும் வடுவைத் தாங்க வேண்டியிருக்கும், ”என்று கூறும் துஷார்,  2015 ஜனவரியில் யுஏபிஏ வழக்கு தொடர்பாக கேரள காவல்துறை இதேபோன்ற சோதனையில் ஈடுபட்ட அனுபவம்  தனக்கு உண்டு என்கிறார்.

  "என்ஐஏவின் தொடர்ச்சியான  சோதனைகள் மற்றும் அமைப்பு மீதான தடை பிஎஃப்ஐ செயல்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வணிகம் மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.  “எங்களில் ஆசிரியர்கள், வணிகர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், மளிகைக் கடை உரிமையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளனர்.  எங்களின் பெரும்பாலான வங்கிக் கணக்குகள் அரசால் முடக்கப்பட்டுள்ளன.  உதாரணமாக, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் பொதுச் செயலாளர் ரவூப் ஷெரிப் ஒரு என்ஆர்ஐ தொழிலதிபர்.  அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புலனாய்வு முகமைகள் அமைப்புக்கு வெளிநாட்டு நிதிகளை நிர்வகித்தவர் இவர்தான் என்று ஒரு கதையை உருவாக்கியது.  அவர்கள் அவருடைய நிதி பரிவர்த்தனைகளை அதற்கு ஆதாரமாக  சமர்ப்பித்தனர்.   அவரது கணக்கை முடக்கினர். இதனால் அவர் பெரும் இழப்பை சந்தித்தார்.  ஒரு இந்தியக் குடிமகனின் வணிக உரிமை பாதிக்கப்படுகிறது, ”என்று அன்வர் அமைப்பின் தடைக்குப் பிறகு அவரும் அவரது குடும்பத்தினரும் சந்தித்த சோதனைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது இந்த நகவல்களையும் கூறுகிறார்.

புத்தகங்கள் தவிர, பழைய சிம் கார்டின் கவர், கேம்பஸ் ஃப்ரண்ட் நேஷனல் கவுன்சில் என்ற தலைப்பிலான வெற்று கோப்பு அட்டை மற்றும் அன்வரின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகியவற்றை என்ஐஏ அதிகாரிகள் கைபற்றியுள்ளனர்.  இது குறித்து வழக்கறிஞர் துஷார் கூறுகையில், "டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்வது தொடர்பாக தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

ஸ்மார்ட்போன் என்பது ஒரு தனிநபரின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.  அவர்களின் வங்கி கணக்கு அமைப்புகள், தகவல் தொடர்பு, விருப்பங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கம் முக்கியமாக அதை சார்ந்துள்ளது.  அவர்களின் போன்களை பறிமுதல் செய்வதன் மூலம், இந்த வசதிகள் அனைத்தும் மறுக்கப்படுகின்றன.  புலனாய்வாளர்களின் நோக்கம் சாதனத்தில் உள்ள குற்றஞ்சாட்டக்கூடிய உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்வதாக இருந்தால், அவர்கள் அவர்கள் அந்த உள்ளடக்கத்தை நகலெடுக்கலாம் அல்லது
மொபைலை  குளோன் செய்யலாம்.  கைபற்றப்படும் மொபைலைத் திருப்பித்தர  திருப்பித் தர பல மாதங்கள் ஆகும்” என்கிறார்.

சோதனையின் போது, ​​ஒரு பெண் அதிகாரி அன்வரின் மனைவியின் பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்களைப் பதிவுசெய்து, அவர் அமைப்பின் தீவிர உறுப்பினரா என்றும், அமைப்பின் ஏதேனும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டாரா என்றும் கேட்டிருக்கிறார்.

ரெய்டு பற்றிய செய்தி ஊடகங்களுக்கு வெளியிடப்படுமா என்று அனவரின். மனைவி பெண் அதிகாரியிடம் கேட்க,  அந்த அதிகாரி, ரெய்டு ரகசியமான முறையில் நடத்தப்பட்டதாகவும், ரெய்டுக்கு சற்று முன்னதாக உள்ளூர் காவல் நிலையத்துக்கும் அறிவிக்கப்பட்டதாகவும் பதிலளித்துள்ளார்

இருப்பினும், தொலைதூர இடங்கள் உட்பட 56 இடங்களில் நடந்த சோதனைகள் கேரளாவின் அனைத்து முக்கிய செய்தி நிறுவனங்களிலும் முக்கிய செய்தியாக இருந்தன.  ரெய்டு நடந்த வீடுகளின் காட்சிகளை பல தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பின.  பாஜகவின் ஊதுகுழலான ஜனம் டிவி மற்றும் பல யூடியூப் செய்திகள் முஸ்லிம் காவல்துறை அதிகாரிகள் சோதனை குறித்த செய்திகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆதாரங்களுக்கு கசியவிட்டதாக செய்தி வெளியிட்டன. 

பத்தனம்திட்டா மாவட்டத்தில் நடந்த சோதனையின் போது பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் பலர் இல்லாததை இதற்கு ஆதாரமாக கூறினர்.

அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச முஸ்லீம் தீவிரவாத அமைப்புகளுடன் பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து நீதிமன்றத்தில் என்ஐஏ அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக இஸ்லாமிய வெறுப்பை பிரதான செய்தியாக கொண்டு செயல்பட்டுவரும்   யூடியூப் வலைதளமான மருநாடன் மலையாளி செய்தி வெளியிட்டது.   ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் இணைந்து புதிய  அமைப்பை ரகசியமாக தொடங்க பாப்புலர் ஃப்ரண்ட் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு துப்பு கிடைத்துள்ளதாக அந்த செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


"பயங்கரவாத அமைப்புடன் ஒரு நபர் அல்லது அமைப்பின் தொடர்பைப் பற்றிய உளவுத்துறை பதிப்புகளை ஊடகங்கள் அப்படியே மக்கள் மத்தியில் செல்வதற்கான பல உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம்.  இதுபோன்ற கதைகள் பொதுமக்களின் கருத்தை கேட்பதில் பெரும் பங்கு வகிக்கும், மேலும் பலர் அந்த பதிப்புகளை நம்புவார்கள், ”என்று வழக்கறிஞர் துஷார் கூறுகிறார்.

இந்த செய்திகள்   உண்மைச் சரிபார்ப்பு இல்லாமல் சமூக ஊடகங்களிலும் பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களிலும் பரவலாகப் பரப்பப்பட்டு வருகிறது.  யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட இத்தக்கய செய்தியின் கருத்துப் பெட்டியின்கீழ், மக்கள்  பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களைக் என்கவுண்டரில் கொன்று அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என மக்கள் கேட்டுக்கொள்கிறார்கள், மேலும் பலர் உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தொடங்கிய புல்டோசர் இயக்கத்தைப் போன்ற செயல்களைக் இங்கேயும் கோருகிறார்கள்.

"எனது இரண்டு குழந்தைகளும் மருத்துவம் படிக்கிறார்கள்.  மூத்த மகள் இறுதித் தேர்வுக்குத் தயாராகிறாள்.  அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் தோழிகள்  பற்றி நான் கவலைப்படுகிறேன்.  இத்தகைய அவதூறான பிரச்சாரங்கள் அவர்களை மனரீதியாக பாதிக்கும், மேலும் அவர்களின் சக நட்பு வட்டத்திலிருந்து அவர்களை மேலும் அந்நியப்படுத்தும், ”என்று அன்வரின் மனைவி கவலையான தொனியில் பேசுகிறார்.

அவரும் அவரது அமைப்பும் ஏன் அரசால் குறிவைக்கப்படுகிறார்கள் என்று  அன்வரிடம் கேட்டதற்கு, அன்வர் இப்படி பதிலளித்தார்: "இன்றைய இந்தியாவில் முஸ்லிமாக இருப்பது ஒரு குற்றம்.  முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் மற்றும் அவர்களின் வீடுகள் பட்டப்பகலில் அழிக்கப்படுகின்றன.  முஸ்லீம் மக்களை அணிதிரட்டுவதற்கான எந்தவொரு முயற்சியும் அரசால் குற்றமாக்கப்படுகிறது.  பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் துன்புறுத்தப்படுகிறார்கள்  முஸ்லிம் பெயர்களைக் கொண்டிருப்பதற்காக அரசால் துன்புறுத்தப்படுகிறார்கள்.  இந்தியா தன்னை ஒரு மதச்சார்பற்ற நாடாகக் கூறிக்கொண்டாலும், முஸ்லிம் சமூகத்தின் மீதான அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பு நிலை அந்தக் கூற்றை கேள்விக்குள்ளாக்குகிறது"!


ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த இந்த ரெய்டின் முடிவில்  அதிகாரிகள் புத்தகங்கள் மற்றும் ஸ்மார்ட் போனுடன் வீட்டை விட்டு வெளியே செல்லவிருந்த போது, ​​"நீங்கள் குற்றம் எதுவும் கண்டீர்களா?  ஃபோனையும் புத்தகத்தையும் ஏன் எடுக்த்துச் செல்கிறீர்கள்?"  என அவர்களிடம் அன்வர் கேட்டதற்கு..."

“வேறு என்ன செய்ய முடியும்?  நாங்கள் வெறும் கையுடன் திரும்ப முடியாதே! ”என்று விசாரணை அதிகாரி பதிலளித்ததை அன்வர் நினைவு கூர்ந்தார்
 

-Courtesy: Maktoob Media
தமிழில்: அபு ஃபைஸல்



Comments