முஸ்லிம்களை தொழவிடாமல் ரகளை செய்த பஜ்ரங் தள் குண்டர்கள்!

 முஸ்லிம்களை தொழவிடாமல் ரகளை செய்த பஜ்ரங் தள் குண்டர்கள்!

இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த பஜ்ரங்தள் உறுப்பினர்கள் கடந்த டிச 23ம்தேதி வெள்ளிக்கிழமை குருகிராமில் உள்ள செக்டார் 69 ல் முஸ்லிம்களின் தொழுகைக்கு இடையூறு செய்துள்ளனர்.

லைவ் ஹிந்துஸ்தான் வெளியிட்ட வீடியோவில், அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கடந்த  23/12/22) தொழுகைக்கு வந்த ஒரு முஸ்லிமிடம் திறந்த வெளியில் பிரார்த்தனை செய்ய கூடாது என்று மிரட்டுகிறார்
என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு!

மேலும் அந்த வீடியோவில், "ஆறு இடங்களில் தொழுகை நடத்த   அவர்களுக்கு அனுமதி இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமில்லை, ”என்று அவர் வீடியோவில் கேட்கிறார். அதோடு, "வரவிருக்கும் வாரங்களில் தொழுகை நடத்தினால்  நாங்கள் எதிர்ப்பை அதிகப்படுத்துவோம்."
என்கிறார்.

இதுகுறித்து பஜ்ரங் தளத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன் சைனி, " 15 ஆண்டுகளாக திறந்த வெளியில் தொழுகை நடத்துவதாக முஸ்லிம்கள்  பொய் சொல்கிறார்கள்.

திறந்தவெளிகளில் தொழுகை நடத்தக்கூடாது என்று முதல்வர் தெளிவாகக் கூறியுள்ளார்"்எனத் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 2021 ல், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் திறந்தவெளிகளில் தொழுகை நடத்துவதை அனுமதிக்க முடியாது என்றும், குருகிராமில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட சில தளங்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு, குருகிராமில் இந்துத்துவா குழுக்கள் தொழுகைக்கு இடையூறு செய்த பல சம்பவங்கள் மீடியாக்களில்  செய்திகளாக வந்தன.

டிசம்பர் 17, 2021 அன்று, நகரின் உத்யோக் விஹார் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் இந்துத்துவா குழுக்கள் தொழுகைக்கு இடையூறு செய்தன.  சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள், "பாரத் மாதா கி ஜெய்" என்று மக்களைக் கட்டாயப்படுத்துவதைக் காட்டியது.  அன்று, குருகிராமில் தொழுகைக்காக ஒதுக்கப்பட்டிருந்த தளங்களில் ஒன்றான செக்டர் 37 மைதானத்தில் இருந்து முஸ்லிம்கள் விலகி இருந்தனர்.

இந்த குறிப்பிட்ட தொழுகைக்கான தளம் நவம்பர் 2021 மற்றும் டிசம்பர் 2021 க்கு இடையில் பல இடையூறுகளைக் கண்டது.

செக்டார் 37 மைதானத்தில் முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதை எதிர்த்து இந்துத்துவா குழுக்கள் கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி  அங்கு கிரிக்கெட் விளையாட விரும்புவதாகக் வம்பு பேசி போராட்டம் நடத்தினர்.


2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலைக் குறிக்கும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அந்த இடத்தில் ஒரு ஹவன் விழாவையும் இந்துத்வா குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன.

  பிரிவு 12A இல், 2021 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி, ஒரு வாலிபால் மைதானம் அமைக்கப்பட உள்ளதாகக் கூறி ஒரு குழு முஸ்லிம்களின் தொழுகையைத் தடுத்தது.

-ஹிதாயா 

Comments