பொது சிவில் சட்டம்: நாட்டின் பெரும்பான்மை சமூகம் புரிந்துகொள்ளவேண்டும் !

   

 
பொது சிவில் சட்டம்:
நாட்டின் பெரும்பான்மை சமூகம் புரிந்துகொள்ளவேண்டும் !

பொது சிவில் சட்டம் , குடிமக்கள் தங்களுக்கு விருப்பமான மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமையை இது மீறுகிறது, இது மத சமூகங்கள் தங்கள் சொந்த தனியார்  சட்டங்களைக் கடைப்பிடிப்பதை இல்லாமல் ஆக்குகிறது. உதாரணமாக, அரசியல் சாசன செட்டப் பிரிவு 25 ஒவ்வொரு மத அமைப்பின் சுயவிருப்பத்திற்கு  உத்தரவாதம் அளிக்கிறது. பிரிவு 29 அவர்களின் தனித்துவமான கலாச்சாரத்தை பராமரிக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்கிறது. நாட்டின் மதச்சார்பின்மை கட்டமைப்பை பொது சிவில் சட்ட்ம் அழித்துவிடும் என்பதை மதச்சார்பற்ற சக்திகள் அழுத்தமாக வலியுறுத்துகிறார்கள்.


இந்திய அரசியலமைப்பின் 25-28 பிரிவுகள் இந்திய குடிமக்களுக்கு மத சுதந்திரத்தை உத்தரவாதம் அளிக்கின்றன மற்றும் மத அமைப்புகள் தங்கள் சொந்த விவகாரங்களை நடத்த அனுமதிக்கின்றன. அதே சமயம் அரசியலமைப்பின் பிரிவு 44, ஒரு நாட்டின் கொள்கைகளை நிறுவும் போது அனைத்து இந்திய குடிமக்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளையும் பொதுச் சட்டத்தையும் பயன்படுத்த வேண்டும் என்கிறது. ஆனால் பிரிவு 44  என்பது அரசியல் சாசன சட்டத்தின் வழிகாட்டு கொள்கைகள் என்ற பகுதியில் தன் சொல்லப் பட்டுள்ளது அதேசமயம் பிரிவு  25 & 28  அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளில் இடம் பெற்றுள்ளது.

அதோடு, எல்லாவற்றிற்கும் மேலாக, தனியார்  சட்டங்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இரண்டுக்கும்  பொதுவான நலன் சார்ந்தவை பட்டியலிடப்பட்டிருக்கும் Concurrent List  எனப்படும் பட்டியலில் அட்டவணை 5 ஆக சேர்க்கப்பட்டுள்ளன. இது பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் ஆகிய இரண்டிற்கும் தனிப்பட்ட சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. தனிமனிதச் சட்டங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் விரும்பியிருந்தால், அவற்றை யூனியன் (ஒன்றிய ) பட்டியலில் சேர்த்து நாடாளுமன்றத்துக்கு சட்டமியற்றும் முழு அதிகாரம் வழங்கியிருப்பார்கள்.

அதனால் தான்,இந்திய அரசியல் நிர்ணய சபையின் அடிப்படை உரிமைகள் துணைக்குழு, பொது சிவில் சட்டத்தை  அடிப்படை உரிமையாக சேர்ப்பதை வேண்டுமென்றே தவிர்க்கிறது. பழங்குடியின அமைப்புகளும் இதேபோன்ற கவலையை வெளிப்படுத்தியுள்ளன, ராஷ்ட்ரிய ஆதிவாசி ஏக்தா பரிஷத், 2016 இல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதன் உறுப்பினர்களின் மரபுகள் மற்றும் மத நம்பிக்கைகளுக்கு எதிர்கால பொது சிவில் சட்டத்திலிருந்து  இருந்து பாதுகாப்பைக் கோரியது.


  நாகாலாந்தின் பழங்குடியின மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழக்கமான விதிகள் திருமணம், சொத்துரிமை போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்கு வரும்போது கூட்டாட்சி, (அதாவது ஒன்றிய arasin) சட்டங்களைவிட இவை முன்னுரிமை பெறுகின்றன.

சிவில் சட்டங்கள் மற்றும் CrPC மற்றும் IPC போன்ற குற்றவியல் சட்டங்கள் இந்தக் கொள்கைக்கு (ஒரே சட்டம் ) கடைபிடிக்கவில்லை என்றால், வெவ்வேறு சமூகங்களின் தனித்துவமான தனிப்பட்ட சட்டங்களுக்கு "ஒரு நாடு, ஒரு சட்டம்" பயன்படுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு அரசாங்கங்கள் 1872 ஆம் ஆண்டின் ஃபெடரல் இந்திய எவிடன்ஸ் சட்டத்தை மாற்றியுள்ளன. குற்றவியல் சட்டம் என்று  வரும்போது பல மாநிலங்களில் பல்வேறு சட்டங்கள் உள்ளன (உதாரணத்திற்கு : சட்டப்பூர்வ குடிப்பழக்க வயது)


முதன்மையாக இந்து மற்றும் முஸ்லீம் மக்களுக்கு, தனிப்பட்ட சட்டங்கள் முதலில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது வரைவு செய்யப்பட்டன. சமூகத் தலைவர்களின் எதிர்ப்பைக் கண்டு பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்த உள்நாட்டு விவகாரத்தில் அதிகம் தலையிட வேண்டாம் என்று முடிவு செய்தனர்.


கோவாவைப் பொறுத்தவரை , இப்போது அது  இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் என்றாலும் முன்பு போர்த்துகீசியம் கோவா மற்றும் டாமன் காலனித்துவ ஆட்சியின் காரணமாக, அது  நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது,  இந்திய மாநிலமான கோவா இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டது. அப்போதே அது  கோவா சிவில் கோட் எனப்படும் அதன் பொது குடும்பச் சட்டத்தை வைத்திருந்தது. , இன்றுவரை இந்தியாவில் ஒரு ஒருங்கிணைந்த சிவில் கோட் கொண்ட ஒரே மாநிலமாக இது திகழ்கிறது என்பது தனி விஷயம்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கிறிஸ்தவர்கள், யூதர்கள், முஸ்லீம்கள் மற்றும் பார்சிகள் இந்துக்களிடமிருந்து தனித்தனி சமூகங்களாக அங்கீகரிக்கப்பட்டதால்  அவர்களுக்கு விலக்கு அளிக்கும் அதே வேளையில்,இந்து குறியீட்டு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, பௌத்தர்கள், இந்துக்கள், ஜைனர்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற இந்திய மதங்களின் வெவ்வேறு பிரிவுகளில் தனிநபர் சட்டங்கள் பெரும்பாலும் குறியிடப்பட்டு மறுவடிவமைக்கப்பட்டன. அதன் பிறகு அவ்வப்போது ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட ஹிந்துவா அமைப்புகளால் பொது சிவில் சட்ட பிரச்சினை அவ்வப்போது கிளப்பப்பட்டு வந்தது.

 1985 இல் ஷாபானு வழக்கின் போது  முஸ்லிம்களின் தனியார் சட்டம் - பொது சிவில் சட்டம் நாடு தழுவிய விவாதமாக்கப்பட்டது. பிறகு 2019, 2020  ஆகிய ஆண்டுகளிலும் இந்த பிரச்சினை பெரும் விவாதமாக்கப்பட்டது என்றாலும் அப்போதெல்லாம் அது பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை. வெறும் விவாதங்களாகவே முடிந்து போனது. இந்த முறை , ஹிந்துராஷ்டிரா அமைக்கும் முயற்சியில் ஆர் எஸ் எஸ் தீவிரமாக ஈடுபாடு வரும் நிலையில்- 2024  பொது தேர்தலில் ஆதாயம் பெற இப்போதே பொது சிவில் சட்டம் குறித்த பிரச்சினை பெரிய அளவில்  கிளப்பப்படுகிறது.

 இதன் முன்னோட்டமாகவே நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது பொது சிவில் சட்டம் கொண்டுவர குழு அமைக்கப்படும் என குஜராத் அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து பாஜக ஆளும் சில மாநிலங்களும் இதனை அறிவித்தான. மாநிலங்களை விட்டு ஆழம் பார்த்த ஒன்றிய அரசு இப்போது பாராளுமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் ஜனநாயக தன்மைக்கும் நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கும் நாட்டின் பெருமையான வேற்றுமையில் ஒற்றுமைக்கும் பெரும் கேடு என்பதை நாட்டின் பெரும்பான்மை சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்



Comments