லப் போ பே ஆத்தி ஹை துவா! இக்பாலின் கவிதையை சொன்னதற்காக வழக்குப் பதிவு!

 லப் போ பே ஆத்தி ஹை துவா!
  இக்பாலின் கவிதையை  சொன்னதற்காக வழக்குப் பதிவு!


லப் பே ஆத்தி ஹை துவா(உதடுகள் பிரார்த்திக்கின்றன)

  என்ற அல்லாமா இக்பாலின் உருது கவிதையை மாணவர்களுக்கு  பாடச். சொன்னதற்காக  உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள   அரசு பள்ளி முதல்வர் மற்றும் ஷிக்ஷா மித்ரா ஆசிரியர் மீது மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளது போலீஸ்!


பள்ளியின் காலை அசெம்ளியின் போது மாணவர்கள் முஹம்மது இக்பாலின் "லப் பே ஆத்தி ஹை துவா" கவிதையை வாசிக்கும் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலானது.  இதையடுத்து, பள்ளி முதல்வர் நஹித் சித்திக் மற்றும்  சிக்ஷா மித்ரா ஆசிரியர் வசீருதீனை
இடைநீக்கம் செய்த கல்வித்துறை அவர்களுக்கு
எதிராக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களை மதம் மாற்றும் முயற்சியில் அரசுப் பள்ளியில் மத பிரார்த்தனை நிகழ்தப்பட்டதாக  உள்ளூர் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) நிர்வாகி சோம்பல் சிங் ரத்தோர் அளித்த புகாரின் பேரில்தான் சித்திக் மற்றும் வசீருதீன் மீது ஃபரீத்பூர் காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

“லபோ பே ஆதி ஹை துவா” என்பது 1902 இல் முஹம்மது இக்பாலால் எழுதப்பட்டது, இவர் அல்லமா இக்பால் என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறார். இன்று கல்வி நிலையங்களிலும் அரசு விழாக்களிலும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின கொண்டாட்டங்களின் போதும் பாடப்படும்  "சாரே ஜஹான் சே அச்சா" பாடலை எழுதியது முஹ்மது இக்பால்தான!

"அல்லாஹ் இபாதத் கர்ணா" (அல்லாஹ்வை வணங்க வேண்டும்) என்று ஒரு பிரார்த்தனை வாசிக்கப்பட்டது.  இது நிர்ணயிக்கப்பட்ட பிரார்த்தனை அல்ல, எனவே பள்ளி முதல்வர் நஹித் சித்திக் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  ஷிக்ஷா மித்ராவுக்கு எதிரான விசாரணைக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன், ”என்று பரேலியின் முதன்மை சிக்ஷா அதிகாரி (பிஎஸ்ஏ) வினய் குமார் கூறியுள்ளார்.

விஹெச்பி நிர்வாகி போலீசில் அளித்த புகாரில், “…ஆசிரியர்கள் நஹித் சித்திக் மற்றும் வசீருதீன் ஆகியோர், இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்தில் மாணவர்களை முஸ்லிம் முறைப்படி பிரார்தனையை ஓத வைத்துள்ளனர். இஸ்லாத்தை நோக்கி மாணவர்களைக் கவரும் வகையில் இரு ஆசிரியர்களும் இதைச் செய்துள்ளனர். இரு ஆசிரியர்களும் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி மாணவர்களை மதமாற்றத்திற்குத் தயாராக்கியுள்ளனர்.
எனத் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் அரசுப் பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 265 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இதற்கிடையில், 62 வயதான நஹித் சித்திக்(தலைமையாசிரியை), டிசம்பர் 12 முதல் விடுமுறையில் சென்றதால், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் போது , தான் பள்ளியில் இல்லை என்று கூறியுள்ளார்.

"நான் மருத்துவ விடுப்பில் இருந்தேன்.  நான் விடுப்பில் செல்வதற்கு முன், தேசிய கீதத்துடன் தினமும் ‘ஏ சக்தி ஹமைன் தேனா’(எங்களுக்கு இந்த சக்தியைத் தா) என்ற நிர்ணயிக்கப்பட்ட பிரார்த்தனையை ஒதி வந்தோம்.  நான் இல்லாத நேரத்தில், ஷிக்ஷா மித்ரா காலை அசெம்பிளியின் போது 'லேப் பே ஆத்தி ஹை துவா'  ஓதியுள்ளனர்.  கடந்த காலத்தில், ஷிக்ஷா மித்ரா இந்த பிரார்த்தனையை வாசிக்கும்படி என்னிடம் கேட்டபோது, ​​​​நான் மறுத்துவிட்டேன்”என்று கூறும் நஹீத் சித்திக் , "வசீருத்தீன் அடுத்த மார்ச் மாதம் ஓய்வு பெற உள்ளார்.  நான் இந்த மார்ச் 31 அன்று ஓய்வு பெற உள்ளேன். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பல நோய்களால் நான் அவதிப்பட்டு வருவதால் எனது ஓய்வுக்காக காத்திருக்கிறேன்.  எனது காலில் மூன்று முறை எலும்பு முறிவு ஏற்பட்டது, ஊன்றுகோல் இல்லாமல் என்னால் நடக்க முடியாது, ”என்று ம்  கூறுகிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 2019 ல், உத்திரப்பிரதேச மாநிலம் பிலிபிட்டின் பிசல்பூர் பகுதியில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர், உள்ளூர் விஹெச்பியினரின்  புகாரைத் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்,  அவர்,  மாணவர்களை மதரசாக்களில் வழுக்கமாக ஓதும்  மத பிரார்த்தனையை வாசிக்கச் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.  அந்த சந்தர்ப்பத்திலும் மாணவர்கள் அல்லாமா இக்பாலின் “லபோ பே ஆத்தி ஹை துவா” பாடலையும் ஓதினார்கள் என்று கூறப்படுகிறது.
-ஃபைஸ்






Comments