ஹிஜாப் எதர்ப்பு: கர்நாடகாவைத் தொடர்ந்து குஜராத்!ஹிஜாப் எதர்ப்பு!
ஹிஜாப் எதர்ப்பு:
கர்நாடகாவைத் தொடர்ந்து குஜராத்!ஹிஜாப் எதர்ப்பு!
மத்திய குஜராத்தின் கேடா மாவட்டத்தில் உள்ள உத்தரசண்டாவில் உள்ள ஐடிஐ (தொழில்துறை பயிற்சி நிறுவனம்) கல்லூரியில் மாணவர்கள் பலரின் மத அடையாளங்களை எதிர்த்து விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) குழுவினர் இந்து மாணவர்களைத் தூண்டி விட்டு இங்கு போராட்டம் நடத்தியுள்ளனர்.
1980 களின் முற்பகுதியில் முதல் இயங்கும் இந்தக் கல்லூரி, மாநிலத்தின் மூன்றாவது பெரிய ஐடிஐ ஆகும். இங்குள்ள சில முஸ்லீம் மாணவிகள் கணினி வகுப்புகளில் புர்க்கா (முக்காடு) மற்றும் மாணவர்கள் தொப்பி அணிந்து வந்து கொண்டிருந்தனர். இதற்கு இந்து மாணவர்களுடன் இணைந்து விஎச்பி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து, கல்லூரி நிர்வாகம், முதல் முறையாக இதுபோன்ற பிரச்சினை வந்துள்ளது, இந்த பிரச்சினை குறித்து ஆலோசிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள ளது. குழுவின் அறிக்கை இன்னும் பத்து நாட்களில் வெளியாகும் என்கிறது.

Comments
Post a Comment