மனிதாபிமான உதவி செய்தால் யுஏபிஏ சட்டம் - என்ஐஏவின் அடாவடி!


மனிதாபிமான உதவி செய்தால் யுஏபிஏ சட்டம்
- என்ஐஏவின் அடாவடி!

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மஸ்ஜித்தின்  இமாம் ஜாவித் அகமது லோனுக்கு தில்லி நீதிமன்றம்  கடந்த டிச 20 ம் தேதி ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த 15 பிப்ரவரி 2022 அன்று கைது செய்யப்பட்ட ஜாவித் லோனுக்கு ஜாமீன் வழங்கியபோது" ​​​​ஒரு நபருக்கு வீடு கட்ட உதவுவது அல்லது  மகளின் மருத்துவ சிகிச்சைக்காக ஒருவருக்கு நிதி உதவி வழங்குவது குற்றமாகக் கருத முடியாது" என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜாவித் லோன் கந்தர்பாலில் உள்ள ஒரு மஸ்ஜிதில் இமாமாக இருந்தார்.

லோன் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி காஷ்மீரின் உறுப்பினர் என்று என்ஐஏ குற்றம் சாட்டியிருந்தது.

லோனின் வசம் இருந்து ஜமாத்-இ-இஸ்லாமி காஷ்மீர் உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை மீட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து லோன் ரூ.15 லட்சம் நன்கொடை பெற்றதாகவும்  அதிலிருந்து  ஒருவருக்கு வீடு கட்ட நிதியுதவி அளிப்பதாக வாக்குறுதி  அளித்ததாகவும், இன்னொருவரின் மகளின் நோய்க்கு சிகிச்சை அளிக்க  ரூ.500 கொடுத்ததாகவும்
மத்திய புலனாய்வுப்ப புலியான என்ஐஏ  தனது குற்றச்சாட்டில்  தெரிவித்துள்ளது.

மனிதாபிமான உதவி செய்வது யுஏபிஏ சட்டத் தின் கீழ் அது மாபெரும் குற்றமாக கருதியுள்ளது என்ஐஏ. என்ஐஏவின் இந்த செயலைக்கண்டு சிரிப்பதா வேதனைப்படுவதா?

"எவ்வாறாயினும், ஒரு நபருக்கு வீடு கட்டுவதற்கு உதவுவது அல்லது நோய்வாய்ப்பட்ட மகளுக்கு சிகிச்சை அளிக்க ஏழை ஒருவருக்கு நிதி உதவி செய்வது, எந்த வகையிலும் ஏ-1( ஜாவித் லொன்) க்கு எதிரான குற்றமாக கருத முடியாது"  ஜாமீன் உத்தரவில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஷைலேந்தர் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.

“அது அப்படியே இருந்தாலும் கூட, இந்த வழக்கில் உண்மைகள் மற்றும் ஒட்டுமொத்த சூழ்நிலைகளையும்  கவனத்தில் எடுத்துப்பார்த்தால்,  ஏ-1 க்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டிய ஒரு பொருத்தமான வழக்கு இது  என்பதை இந்த நீதிமன்றம்  கருதுகிறது.  அதன்படி, ஏ-1 ஜாவைத் அஹ்மத் லோனுக்கு ரூ.30,0001-க்கான தனிநபர் பத்திரம் மற்றும் அதனுடன் இந்த தொகைக்கு இணையான ஒரு நபர் உறுதிப்பத்திரத்தையும்
சமர்பித்து நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு  ஜாமீன் வழங்கப்படுகிறது,” என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஜாவித் லோன் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான  வழுக்கறிஞர் அபிழுபக்கர சப்பபாக், லோனின் வீட்டில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைபற்றப்பட்டன என்ற குற்றச்சாட்டை அரசு தரப்பு சாட்சிகள் இருவர் உண்மைப்படுத்தவில்லை. அதோடு அவர்கள் தங்கள் வாக்குமூலத்தில் லோன் வீட்டிலிருந்து என்ஐஏ எந்த வெடி பொருட்களையும் கைபற்றவில்லை என கூறியிருப்பதாக  விசாரணையின்போது வாதிட்டிருந்தார்.
-அபு

 

Comments