ஷாருக்கான் படப்பிடிப் புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த சங்பரிவார்!



 ஷாருக்கான் படப்பிடிப் புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த சங்பரிவார்!



ஷாருக்கான் நடிக்கும் ‘டுங்கி’ படத்தின் படப்பிடிப்பு மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்று வருவதாக அறிந்த இந்துத்துவா அமைப்புகளான பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இருப்பினும், இந்த மூன்று நாள் படப்பிடிப்பின்போது கான் உட்பட முக்கிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும், படப்பிடிப்பு கடந்த டிச 15 அன்றே முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.திரைப்படத்தின் துணை நடிகர்கள், திரைப்பட உதவியாளர்கள் ஆகியோருக்கு எதிராக இந்துத்வாக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அதாவது, ஆளில்லாத கடையில் டீ ஆத்தியிருக்கிறார்கள்.

ஷாருக்கானின் வரவிருக்கும் படமான ‘பதான்’ க்கு எதிராக இந்துத்துவா குழுவினர்  வெறுப்புப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட திரைப்படத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பதான் திரைப்படம்  இந்து உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாகக் இந்துத்துவாவினர் கூறிவருகினரறனர். குறிப்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட பதான் திரைப்படப் பாடல் மூலம்
இந்து மத உணர்வுகள் சீண்டப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஷாருக்கானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய இந்துத்துவாவினர்,   படப்பிடிப்பு நடந்த இடத்தில் போலீசார் வைத்த தடுப்புகளை தள்ளிக்கொண்டு முன்னேற முயன்றனர்.
போலீசார் அவர்களைத தடுத்து நிறுத்தியுள்ளனர்.

“நாங்கள் நிதானத்தைக் காட்டினோம்.  ஜபல்பூர் கலெக்டரின் அனுமதியுடன் படப்பிடிப்பு நடைபெற்றது.  டிச 15 அன்றே படப்பிடிப்பு முடிந்துவிட்டது.  போராட்டக்காரர்கள்  படப்பிடிப்பை நிறுத்தக் கோரி தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்” என்று நகரக் காவல் கண்காணிப்பாளர் பிரியங்கா சுக்லா மீடியாக்களிடம் தெரிவித்துள்ளார்.
-ஹிதாயா

Comments