இந்து பெண்ணோடு பழகுவதா? - வெறியான ஏபிவிபியினர் !

இந்து பெண்ணோடு பழகுவதா?
- வெறியான ஏபிவிபியினர் !




கர்நாடகாவின் தக்‌ஷின் கன்னடா மாவட்டத்தில் உள்ள   PU கல்லூரியின் 18 மாணவர்கள் இந்த வார தொடக்கத்தில் ஒரு இந்து பெண்ணுக்கும் ஒரு முஸ்லீம் பையனுக்கும் இடையேயான சமய உறவு காரணமாக நடத்திய மோதல்களைத் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நீக்கப்பட்ட 14 ஆண்களும் நான்கு பெண்களும் விட்டலா பியு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு அறிவியல் பாடப்பிரிவைச் சேர்ந்தவர்கள்.

கல்லூரி முதல்வர் ஆதர்ஷா ராய், "மூன்று மாதங்களுக்கு முன்பு விஷயம் வெளிச்சத்திற்கு வந்தபோது, ​​பெண்ணுக்கும் பையனுக்கும் இடையிலான உறவை இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்புடைய சில மாணவர்கள் எதிர்த்தனர். அந்த மாணவி மற்றும் மாணவனின்  
பெற்றோர்கள் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் முன் இருவரும்  எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர் என்கிறார்"

இருப்பினும், ஒரு சோதனையின் போது சிறுமியின் பையில் காதல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.  இது வளாகத்தில் உள்ள இரு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே பதற்றத்தைத் தூண்டியது. அந்த பெண்ணுடன் தொடர்ந்து தொடர்பில்  இருந்ததற்காக சில இந்து மாணவர்கள் அந்த முஸ்லீம் பையனை எச்சரித்து, திட்டியதாக கூறப்படுகிறது.


“சில இந்து மாணவர்கள் அந்த முஸ்லீம் மாணவனிடம் காதல் கடிதம் குறித்து விசாரிக்கத் தொடங்கினர்.  இதனால் வளாகத்தில் பதற்றம் நிலவியதால் மீண்டும் அந்த முஸ்லிம் மாணவன்  மற்றும் மாணவியின் பெற்றோரை அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  மாணவியின் பெற்றோரிடம் பேசி, முன்னெச்சரிக்கையாக தேர்வுக்கு மட்டும் மாணவியை கல்லூரிக்கு வரச் சொன்னோம்.  இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற மாணவர்களை இடைநீக்கம் செய்து, அவர்களையும் மார்ச் 2023 இல் திட்டமிடப்பட்ட PUC தேர்வுக்கு மட்டும் ஆஜராகுமாறு அறிவுறுத்தினோம்.

அந்த பெண்ணுக்கும் பையனுக்கும் இடையேயான காதலுக்கு உறுதுணையாக இருந்த தாகக் கூறப்படும் சில மணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் அடங்குவர் இப்போது நிலைமை
கட்டுக்குள் இருக்கிறது. இனிமேல் கல்லூரி நிர்வாகம் மாணவர்களை உன்னிப்பாகக் கண்காணிக்கும்" என்கிறார் ராய்.

இதற்கிடையில், தக்ஷிண கன்னடாவில் உள்ள அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) பிரிவு, இந்துப் பெண்களை சிக்க வைத்து அவர்களை இஸ்லாத்திற்கு மாற்றுவதற்கு மதங்களுக்கு இடையேயான காதல் "நன்கு திட்டமிடப்பட்ட சதி" என்று குற்றம் சாட்டியுள்ளது.  இப்போது தடைசெய்யப்பட்டுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாணவர் பிரிவான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, முஸ்லிம் பெண்கள் மற்றும் இளைஞர்களை வைத்து    இந்துப் பெண்களை காதல் விவகாரங்களில் சிக்க வைத்து உணர்வுகளைச் 
மழுங்கடித்து   மதம்மாற்ற குழுக்களை உருவாக்கியது என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.
-அபு




Comments