பனாரஸ் பல்கலைக்கழகத்தை இந்துத்துவ பல்கலையாக்க பாஜக முயற்சி!

 


பனாரஸ் பல்கலைக்கழகத்தை இந்துத்துவ பல்கலையாக்க பாஜக முயற்சி!



பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 500 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், தேர்ந்தெடுக்கப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்க முடியாத நிலை உள்ளது. ஏனெனில், 16 மாதங்களாக பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவை அமைக்க மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் இந்துத்துவாவினரை நியமிக்கும் பணியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.  தமிழ்நாடு மற்றும் காசி (வாரணாசி) இடையேயான வரலாற்று உறவுகளைக் கொண்டாடும் ஒரு மாத கால நிகழ்ச்சிகளை காசி-தமிழ் சங்கமம் நவம்பர் 17 அன்று BHU ல் தொடங்கியுள்ளது.

நவம்பர் 19 அன்று, 
தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த சிலர் உட்பட பிரதிநிதிகள் மத்தியில் மோடி உரையாற்றினார்.  நவம்பர் 21 அன்று, தமிழ்நாட்டிலிருந்து ஒரு  மாணவப் பிரதிநிதிகள் குழு ஒன்று வாரணாசியிலிருந்து சுமார் 130 கிமீ தொலைவில் உள்ள அலகாபாத்திற்குச் சென்று இந்து மதத்தின் புனிதத் தலமான கங்கை மற்றும் யமுனை சங்கமிக்கும் இடத்தைப் பார்வையிட்டுள்ளனர்.  மத்திய அரசின் விளம்பரப் பிரிவான பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (பிஐபி) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், 'சங்கம் காட்'டை (Sangam ghat- கங்கை- யமுனை சங்கமிக்குமிடம்)அடைந்ததும் மாணவர்கள் “மிகவும்
அவர்கள் “ஹரே ஹரே மகாதேவ்” மற்றும் “பாரத் மாதா கீ ஜெய்” என்று கோஷமிட்டதைக் காண முடிந்தது" என கூறப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட நிர்வாகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் சிலர் மாணவர்களின் தூதுக்குழுவை பிரயாக்ராஜ் (அலகாபாத்) மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர், அதாவது  அக்ஷயவத் ('அழியாத ஆலமரம்', இது இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள புனிதமான அத்தி மரம் என கூறப்படுகிறது),  சந்திரசேகர் ஆசாத் பூங்கா, பிரயாக்ராஜ் அருங்காட்சியகம் மற்றும் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திர்,” ஆகிய இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப் பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  சங்கம் நகரியில் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு, அந்த  மாணவர்களின் பிரதிநிதிகள்கு குழு பண்டைய மற்றும் இந்துக்களின் புனித நகரமான அயோத்திக்கு புறப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.


பிஐபி யின் மற்றொரு வெளியீட்டில்,

'காசி தமிழ்ச் சங்கமத்தின் ஒரு பகுதியாக நவம்பர் 21 ஆம் தேதி தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு பெரிய மாணவர் குழுவினர்
காசியின் பல்வேறு மலைத்தொடர்களில்   கூடியதாகவும், அவர்கள்  “ஹர ஹர மகாதேவ்’ என்ற கோஷத்துடன் மலைத்தொடர்களில் புனித நீராடிய பிறகு,  பல்வேறு குழுக்களாக பிரிந்து  ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றதாகவும் .  பின்னர் பாரம்பரிய பனாரசி உணவு வகைகளை ருசித்தும், பல்வேறு கைவினைப் பொருட்களை சோதித்து வாங்குவதில் மும்முரமாக இருந்ததையும் காணமுடிந்தது' என்று   கூறப்பட்டுள்ளது.

தனது பெயரை வெளிப்படுத்த  விரும்பாத பனாரஸ் பல்கலையின்  பேராசிரியர்  ஒருவர், "காசி வரலாற்று ரீதியாக விவாதம் மற்றும் கலந்துரையாடலின் மையமாக இருந்தது.

அறிஞர்கள் இங்கு வந்து விவாதம் செய்யவும், ஒருவருக்கொருவர் கற்றுக் கொள்ளவும் வந்தனர்.  ஆனால் அத்தகைய தொடர்புகளை (சமகமத்தின் ஒரு பகுதியாக) காட்ட எந்த முயற்சியும் இல்லை.  இப்போது நடப்பது முழுக்க முழுக்க இந்துத்துவத்தை வளர்ப்பதற்காக காசியைக் முன்னிறுத்துவதுதான்.  அரசியல் ஆதாயம் பெறவே இது செய்யப்படுகிறது” என்கிறார்.


பனாரஸ் பல்கலையின்
சிறப்புப் பணியில் இருக்கும் முன்னாள் அதிகாரி விஸ்வநாத் பாண்டே, "பல்கலைக்கழகத்தின் சுமூகமான செயல்பாட்டிற்கு நிர்வாகக் குழு (EC) அமைக்கப்பட வேண்டும்.  நிர்வாக்க் குழுவின்  அனுமதி இல்லாத நிலையில், சுமார் 150 ஆசிரிய உறுப்பினர்களின் நியமனக் கடிதங்களை பல்கலைக்கழகம்  கிடப்பில் போடும் நிலை உருவாகியுள்ளது. பனாரஸ் பல்கலையின் சட்டத்தின் கீழ், பல்கலைக்கழகத்தின் பார்வையாளரான ழ ஜனாதிபதி, மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிர்வாகக் குழுவின் எட்டு உறுப்பினர்களை நேரடியாக நியமிக்கலாம்." என்கிறார்.

இந்த செய்தியை வெளியிட்டிருக்கிற தி டெலிகிராப்  இதழ்,
பல்கலையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கான  காரணங்களைக் கேட்டு  இந்த ஆண்டு ஜூலை மாதம் ககவல் அறியும் சட்டத்தின் கீழ்  விண்ணப்பத்தை கல்வி அமைச்சகத்திடம் தாக்கல் செய்தது.  அமைச்சகமோ அந்த விண்ணப்பத்தை  பல்கலைக்கு அனுப்பியது.   பல்கலையின் பொறுப்பு அதிகாரி தவிர்க்கும் விதமான பதில் அளித்துள்ளார்:

"பல்கலையின்   உறுப்பினர்கள் இந்திய ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படுவார்கள்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

பேரா. பாண்டேயோ,  "பல்கலையி்ல் கிட்டத்தட்ட 500 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  அதற்கு நிர்வாகக் குழுவை அமைக்க   அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  2021 இல் இந்துக் கல்வியில் முதுகலைப் படிப்பைத் தொடங்கிய முதல் பல்கலைக்கழகமாக  பனாரஸ் பல்கலை மாறியது. 2018ல், வேத ஞானத்தையும் நவீன அறிவியலையும் ஒருங்கிணைக்க ஒரு வேத அறிவியல் மையத்தை இது அமைத்தது"
என்கிறார்.
-அபு

 

Comments