உமர் காலித் - சித்தீக் கப்பனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!



உமர் காலித் - சித்தீக் கப்பனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!



பிரபல மனித உரிமை ஆர்வலர் உமர் காலித் 832 நாட்களுக்குப் பிறகு தனது சகோதரியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக கடந்த டிச 23ம் தேதி காலை ஒரு வார இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

காலை 8.30 மணிக்கு வீட்டை அடைந்த உமர் காலித், ஊடகங்களுடன் பேச அனுமதிக்கப்படவில்லை.

  2020ல் வடகிழக்கு டெல்லியில் இந்துத்வாவினர் நடத்திய கலவரம் மற்றும் படுகொலைகள் தொடர்பான  சதி வழக்கில் காலித் போலீசாரால் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.  இந்த வழக்கில், டிசம்பர் 12 அன்று, டெல்லி நீதிமன்றம், காலித்துக்கு ஒரு வார இடைக்கால ஜாமீன் வழங்கியது.  கர்கார்டூமா நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத், டிசம்பர் 23 ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலத்திற்கு காலித் ஜாமீன் வழங்கினார்.

அவர் டிசம்பர் 30-ம் தேதி சரணடைய வேண்டும். திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இரண்டு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் கோரியிருந்தார்.காலித் கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல, UAPA வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு அமலாக்கத்துறையின் பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) வழக்கில் சிறை படுத்தப்பட்டிருந்த கேரள முஸ்லிம் பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த டிச 23 அன்று ஜாமீன் வழங்கியுள்ளது.

நீதிபதி தினேஷ்குமார் சிங் தலைமையிலான அமர்வு கப்பனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் லக்னோ நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் மறுத்ததை அடுத்து, அக்டோபர் 2022 இல் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் கப்பன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு கப்பனை சிறையில் இருந்து விடுவிக்க வழி செய்கிறது.என்றாலும், கடந்த டிச 23  வெள்ளிக்கிழமை,
இந்த ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கடைசி வேலை நாள் என்பதால், பி.எம்.எல்.ஏ வழக்கில் உயர்நீதி மன்றத்தால்  ஜாமீன் வழங்கப்பட்ட   சித்திக் கப்பன் விடுதலை ஆக முடியவில்லை.குறைந்தது ஜனவரி 2, 2023 வரை அவர் காவலில்  வைக்கப்படுவார்.ஜனவரி 2, 2023 அன்று தான் மீண்டும் நீதிமன்றம்  திறக்கப்படும்.

செப்டம்பர் 9 அன்று, "ஒவ்வொரு குடிமகனுக்கும் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க உரிமை உண்டு" என்று கூறி, கொடூரமான UAPA வழக்கில் கப்பனுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.  இருப்பினும், 2021 இல் அமலாக்க இயக்குநரகத்தால் அவருக்கு எதிராகப் போடப்பட்ட PMLA வழக்கில் அவர் லக்னோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் எந்த நிபந்தனையும் இன்றி அவருக்கு ஜாமீன் வழங்கியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்த கப்பனின் வழக்கறிஞர், கப்பனுக்கு ஜாமீன் வழங்குவதற்கு நீதிமன்றம் இரண்டு ,உறுதிப்பத்திரங்களை கேட்டுள்ளது என்றார்.


பிஎம்எல்ஏ மற்றும் யுஏபிஏ ஆகிய இரண்டு வழக்குகளிலும் சித்திக் கப்பனுக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கியிருப்பதால், அவர் 26 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து  விடுதலையாகவிருக்கிறார்.

சித்திக் கப்பனுக்கான யுஏபிஏ ஜாமீன் உத்தரவில், நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள ஜாமீனின் கட்டாய சரிபார்ப்பை அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தும் வகையில் முடிக்காமல் வைத்திருந்தனர்.

கொடுக்கப்பட்ட ஜாமீன்களை சரிபார்ப்பதில் ஏற்டும் முடிவற்ற தாமதம் நியாயப்படுத்த முடியாதது என்று சித்திக் கப்பனின் மனைவி ரைஹானத் கப்பன் முன்பு கூறியிருந்தார்.

கடந்த  செப்டம்பர் 9 அன்று உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு முன்பு கப்பன் 700 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார்.

சித்திக் கப்பன் அக்டோபர் 2020 முதல் சிறையில் உள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம்  ஹத்ராஸில்  தலித்  சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்னை  உயர்சாதியைச் சேர்ந்த 4 பேர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த  சம்பவம் தேசிய அளவில் பெரிதாக  அரசியல் விவாதமாக வெடித்ததைத் தொடர்ந்து , அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு தகவல் சேகரி
க்க தில்லியிலிருந்து சென்ற கப்பனை, மதுரா சுங்கச்சாவடியில்  பிடித்த போலீஸ் பின்னர் கப்பனை கைது செய்தது.

- ஃபைஸ்.



 

 

Comments