பொதுசிவில் சட்டம் கொண்டு வர ம.பி அரசு திட்டம்!

பொதுசிவில் சட்டம் கொண்டு வர ம.பி அரசு திட்டம்!


மத்தியப் பிரதேச  பாரதீய ஜனதா கட்சி  அரசாங்கம் மாநிலத்தில்  பொது சிவில் சட்டத்தை    (UCC) அமல்படுத்த ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கடந்த டிச 1ம்தேதி நடைபெற்ற ஒரு விழாவில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்,  ஒரே நாட்டில் ஏன் இரண்டு தனிநபர் சட்டங்கள் உள்ளன என்று கேட்டுள்ளார், மேலும் சிலர்  நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார் சவ்ஹான்.

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது" என்றும் சவுகான் கூறியிள்ளார்.

ஒரு மனிதன் ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட  திருமணங்களை செய்ய வேண்டும்?( வைப்பாட்டியாக வச்சுகலாம் போல ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை)  ஒரு நாட்டில் ஏன் இரண்டு (தனிப்பட்ட) சட்டங்கள் உள்ளன?  ஒரு குழுவை அமைக்க உள்ளேன்,'' என்று ஆர்எஸ்எஸ் திட்டத்தை நிறைவேற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.

Shiraj Singh



குஜராத், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் சில மாநிலங்களும் கடந்த சில மாதங்களில் இதே போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் மத்தியப்பிரதேசத்தில்  அமலுக்கு வந்த பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம் ( Panchayats (Extension to Scheduled Areas) Act-PESA)
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  சில மோசமான ஆண்கள் பழங்குடியினப் பெண்களின் சொத்துக்களை அபகரிப்பதற்காக திருமணம் செய்துகொள்கிறார்கள், அத்தகைய ஆண்கள் PESA இன் கீழ் வழக்குத் தொடரப்படுவார்கள், என்றும் மேலும் கூறியுள்ளார் சவுகான்.

-ஹிதாயா
-----------------------

Comments