பிரியாணி கடையில் இந்துத்வாவினர் வன்முறை!

 பிரியாணி கடையில்  இந்துத்வாவினர் வன்முறை!

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரில் உள்ள ஒரு பிரியாணி விற்பனை நிலையத்தின் சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த பகதூர் ஷா ஜாபரின் உருவப்படம் இந்துத்துவாவினரால்  அடித்து  நொறுக்கப்பட்டுள்ளது
கடைசி முகலாய பேரரசரான பஹதூர்ஷா
அவுரங்கசீப்பின் வழித்தோன்றல் என்று  கூறி இந்துத்வாவினர் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த டிசம்பர் 14 அன்று இரவு நடந்த இந்த சம்பவம் குறித்து யாருக்கும் எதிராக புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கோலாப்பூரின்  ராஜாராம்புரி காவல் நிலைய அதிகாரி  மீடியாக்களிடம் தெரிவித்துள்ளார்.

“இந்துத்வா வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த சில இளைஞர்கள் பிரியாணி கடைக்குச் சென்றுள்ளனர். அங்கு சுவரில் தொங க விடப்பட்டிருந்த பகதூர் ஷா ஜாபரின் உருவப்படத்தைப் பார்த்து  அதற்கு ஆட்சேபம் தெரிவித்த அவர்கள், ‘அவுரங்கசீப்பின் வழித்தோன்றல்’ படத்தை ஏன் சுவரில் தொங்கவிட்டிருக்கிறீர்கள்  என்றும், அதை அகற்றுமாறும் உணவக ஊழியர்களிடம்  கேட்டுள்ளனர்," என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் இதற்கு ஒப்புக்கொண்ட பின்பும்   பஹதூர் க்ஷாவின்
உருவப்படம் அன்றைய தினம் அகற்றப்படவில்லை.  அதனால் அந்த இந்துத்வா கும்பல்  மீண்டும் உணவகத்திற்குச் சென்று, உருவப்படத்தை எடுத்து கீழே போட்டு நொறுக்கியுள்ளனர்.
,என்றும் அந்த  அதிகாரி மேலும் தெரிவித்வித்துள்ளார்.

பகதூர் ஷா ஜாபர் 20வது மற்றும் கடைசி முகலாய பேரரசர்
மற்றும் உருது கவிஞரும் ஆவார்.  அவர் 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பிறகு நாடு கடத்தப்பட்ட பர்மாவின் (இன்றைய மியான்மர்) ரங்கூனில் 1862 ல் அவரது 87 வது வயதில் இறந்தார்.

பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிற இந்துத்துவா அமைப்புகள் முகலாயர்களை குறிப்பாக அவுரங்கசீப்பை எப்போதும் இலக்காக்கி வருகின்றன.  முகலாயர்கள் இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் என்பது தான் இதற்குக் காரணம்.

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி 1,200 ஆண்டுகால அடிமைத்தனம் பற்றி பேசுகிறார் - முகலாய ஆட்சியின் கீழ் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை குறிப்பிட்டு அவர் இப்படி பேசிவருகிறார்.  கடந்த ஆண்டு, வாரணாசியில் , "                   இந்தியாவி


ல் எப்போதெல்லம் அவ்ரங்கசீப் தோன்றினாரோ அப்போதெல்லாம் ஒரு
ஒரு சிவாஜி தோன்றினார்
(இந்து ராஜா, சத்ரபதி சிவாஜி) என மோடி பேசியிருந்தார்.

பிஜேபி மற்றும் இந்துத்வா தலைவர்கள் அவ்வப்போது இப்படி பேசுவதால் அது இந்துத்வா அமைப்புகள் மற்றும் அவற்றின் தொண்டர்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை உணர்வுகளைத் தூண்டிவிடுகிறது.
கும்பல் படுகொலை, ஹிஜாப் எதிர்ப்பு, ஹலால் உணவு எதிர்ப்பு,  அரசுக்கு சொந்தமான மைதானங்களில் வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தத் தடை, லவ் ஜிஹாத் குற்றச்சாட்டு, முஸ்லிம் அடையாளங்கள் அழித்தல், மதமாற்ற தடை சட்டம், மஸ்ஜிதுகள் கோவில்களை இடித்து கட்டப்பட்டன என்ற பொய்ப்பிரச்சாரம், கோவில் திருவிழாக்களின் போது கோவில் வளாகத்தில் முஸ்லிம் வியபாரிகள் கடைகளைப்போட தடை அறிவிப்பு, இந்து பெண்ணுடனான  முஸ்லிம் இளைஞன் அல்லது மாணவனின் நட்புக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட இஸ்லாமிய வெறுப்பிற்கு காரணமாகின்றன.

- ஃபைஸ்

Comments