தர்காக்களை இடித்த உத்ரகாண்ட் அரசு!


தர்காக்களை இடித்த  உத்ரகாண்ட் அரசு!


உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மற்றும் பவுரி மாவட்டங்களில் வன நிலத்தில் கட்டப்பட்டிருந்த சட்டவிரோத கல்லறைகள் மற்றும் சமாதிகள்  இடிக்கப்பட்டுள்ளன.  நடவடிக்கை எடுப்பதற்கு முன், வனத்துறையினர் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 15 கல்லறைகள் மற்றும் சமாதிகளை அடையாளம் கண்டு பின்னர் இவை அனைத்தும் இடிக்கப்பட்டன.  மாநில அரசின் உத்தரவு வந்தவுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பவுரியில் மாவட்ட வனத்துறை நிலத்தில் கட்டப்பட்ட சமாதியும்(தர்கா) அகற்றப்பட்டுள்ளது.  இது பீர் பாபாவின் சமாதி ஆகும. இதற்கு பாவ்ரி எம்எல்ஏ ராம்குமார் போரி, எம்எல்ஏ நிதியில் இருந்து இந்த சமாதிக்கு தகர கொட்டகை அமைக்க இரண்டு லட்சத்தை ஒதுக்கீடு செய்தார்.  ஆனால், எம்.எல்.ஏ.வின் இந்த செயலுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து சமாதியை அகற்றக்கோரினர்.  சமாதியை அகற்றாவிட்டால் விஎச்பி சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என அவர்கள் எச்சரித்திருந்தனர்.  வனத்துறையின் இந்த நடவடிக்கை குறித்து டேராடூன் கஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், பொது இடத்தில் கல்லறை அல்லது சமாதி கட்ட இஸ்லாம் அனுமதிப்பதில்லை என்றார்.
பொது இடத்தில் மட்டுமல்ல; எந்த இடத்திலும்  இறந்து போனவர்களுக்கு கல்லறையோ சமாதியோ கட்ட இஸ்லாத்தில் அனுமதியில்லை.

அதே நேரத்தில், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி, இந்த விவகாரத்தில், மாநிலத்தில் எந்தவிதமான அத்துமீறல்களையும் ஆக்கிரமிப்புகளையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.  சட்ட விரோதமாக கல்லறைகள் மற்றும் சமாதிகள்  கட்டப்பட்டுள்ள இடங்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவதாக உத்தரகாண்ட் வனத்துறை அமைச்சர் சுபோத் உனியால் தெரிவித்துள்ளார்.  அந்த இடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றப்படும். மேலும், அவர்,  டெஹ்ராடூனைச் சேர்ந்ததாகக் கூறப்படும் ஒரு வீடியோ கடந்த காலத்தில் சமூக ஊடகங்களில் வைரலானது.  அந்த வீடியோவில், கல்லறைக்கு முன் மக்கள் கூட்டம் அலைமோதியது.  அந்த வீடியோவை எடுத்தவர்கள் மஜாரில்( சமாதியில்) இருந்தவர்களிடம் தகராறு செய்தனர்.  அவர்களுக்குள் வார்த்தைப்போர் நடந்தது. சமாதி கட்டி செய்து நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வீடியோ  எடுத்தவர்கள் கூறினர் இதை தகவலுக்காக கூறிவதாக தெரிவித்திருந்தார் அமைச்சர்.
-அபு 

 

Comments