44 முஸ்லிம் குடும்பங்கள் வீடுகளை காலி செய்ய உ.பி அரசு நோட்டீஸ்


44 முஸ்லிம் குடும்பங்கள் வீடுகளை காலி செய்ய உ.பி அரசு நோட்டீஸ்


உ.பி மாநிலம், குஷிநகர் மாவட்டத்தில் உள்ள பத்ருனா தாலுகாவின் நுதன் ஹர்டோ கிராமத்தில் உள்ள 44 முஸ்லிம் குடும்பங்களை தங்கள் வீடுகளை காலி செய்யும்படி உத்தரபிரதேச அரசு கேட்டுள்ளது.

'ஆக்கிரமிப்பு நிலங்களில்' வீடுகள் கட்டப்பட்டதாக கூறி, நிர்வாகம் அவர்களுக்கு வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முஸ்லிம்களை கிராமத்தை விட்டு வெளியேற கட்டாயப்படுத்த லெக்பால் என்ற உள்ளூர் இந்துத்வா செயல்பாட்டாளர்  சில வீடுகளையும் சேதப்படுத்தியதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தனது மளிகைக் கடை சேதப்படுத்தப்பட்டதாக முகமது சபீர் அலி சித்திக் என்பவர் , இந்தியா டுமாரோ இணையதள ஊடகத்திடம் கூறியுள்ளார்.

 “நான் ஒரு  வேலையாக வெளியே சென்றிருந்தேன்.   திரும்பி வந்தபோது, ​​எனது கடை சூறையாடப்பட்டிருப்பதைக் கண்டேன்.  சுவர் இடிக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.  லெக்பால் மற்றும் அவரது ஆட்கள் கடையை சூறையாடி பொருட்களை கொள்ளையடித்ததாக என்னிடம் கூறப்பட்டது. " எனத் தெரிவித்துள்ளார்.

லெக்பால் ஆசப் அலியின் வீட்டையும் சேதப்படுத்தியுள்ளார்.  “எனக்கும் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் வந்துள்ளது, லெக்பால் எனது வீட்டையும் சேதப்படுத்தியிருக்கிறார்.  பல தலைமுறைகளாக இந்த மண்ணில் வாழ்ந்து வருகிறோம்.  எனது தாத்தா மற்றும் அவரது அப்பா ஆகியோர் இங்குதான் வசித்து வந்தனர்.  திடீரென வீட்டை காலி செய்யும்படி நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

கூலி வேலை செய்வதன் மூலம்  வாழ்வாதாரத்தை சம்பாதித்து வரும் நாங்கள்  வீடு இடிந்தால் இந்தக் குளிரில் எங்கே போவோம்?” எனப் பரிதாபமாகக் கேட்கிறார் ஆசஃப் அலி!.

அஃப்சாரி காத்துனின் வீடும் சூறையாடப்பட்டுள்ளது.  லெக்பால் மற்றும் சிலர் வீட்டை இடித்ததாக அஃப்சாரி காத்தூன் இந்தியா டுமாரோவிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுமாரோவுக்கு கிடைத்த தகவலின்படி, இதுவரை 47 குடும்பங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது, அவர்களில் 44 பேர் முஸ்லிம்கள்.  நோட்டீஸ் வழங்கப்பட்ட அனைத்து குடும்பங்களும் 50-100 ஆண்டுகளாக அந்த நிலத்தில் வசித்து வருவதாக கூறுகின்றனர்.

“நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க, அனைத்து ஆக்கிரமிப்பாளர்களும் அந்தந்த வீடுகளுக்குள் வைக்கப்பட்டுள்ள பொருட்களை உடனடியாக வேறு இடத்திற்கு மற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இதற்கு இணங்காத பட்சத்தில்,  விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள் என தாசில்தார் பத்ருனா வின் கையெழுத்திடப்பட்ட  நோட்டீசில் கூறப்பகுடும்பங்கள்,கிராம மக்கள் இந்த அறிவிப்பை இந்து-முஸ்லிம் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்.  கிராமத்தில் உள்ள சில குடும்பங்கள், மற்ற குக்கிராமங்களிலும் இதுபோன்ற சுமார் 500 வீடுகள் இருக்கின்றன.  இருப்பினும், முஸ்லீம் வீடுகளுக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்கிறர்கள்.

பெரும்பாலான குடும்பங்கள் ஏழைகள் மற்றும் விவசாய கூலிகளாக வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.  இப்போது முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் கடும்  குளிரில் எங்கே போவது என்ற கவலையில் அவர்கள் உள்ளனர்.

90 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் குழந்தை பருவத்திலிருந்தே வசிக்கும் பல குடும்பங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியா டுமாரோவிடம் பேசிய தாசிலதார் பத்ருனா மகாத்மா சிங், “ரிசர்வ்  நிலத்தில் உள்ள வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  அந்த வீடுகளை காலி செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.  அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து வீடுகளும் அகற்றப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

அவரிடம், இந்தக் குடும்பங்கள் 100-150 ஆண்டுகளாக இங்கு வசித்து வருவதாகக் கூறப்படுகிறதே என் கேட்டதற்கு, முன்பு எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் இப்போது கிராமத்தைச் சேர்ந்த சிலர் புகார் அளித்துள்ளதாகவும், எனவே நடைமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

நோட்டீஸ் காலம் முடிந்துவிட்டதாகவும், தற்போது வீடுகளை இடிக்காமல் இருப்பதற்காக பணம் கேட்பதாகவும் கிராமவாசி ஒருவர் தெரிவித்தார் என்கிறது இந்தியா டுமாரோ.

கூலித் தொழிலாளியாக பணிபுரியும் கமருதீனுக்கு  வீட்டை காலி செய்ய நோட்டீஸ் வந்துள்ளது.  அவர்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருவதாக அவர் இந்தியா டுமாரோவிடம் தெரிவித்தார்.  “என் தாத்தாவும் இங்கு பிறந்து ஒரு வீட்டில் வசித்து வந்தார்.  6 நாட்களில் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,'' என்கிறார் அவர்!

ஐம்பது வயதான முய்னுதீனுக்கும் தனது வீட்டை காலி செய்ய நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.  அவர்  அவரது தந்தை, தாத்தா மற்றும்  தாத்தாவின் தந்தை இங்கு பிறந்து வளர்ந்தவர்கள் என்று கூறுகிறார்.

மற்றொரு உள்ளூர்வாசி ரஃபியுல்லாவிற்கும்  வீட்டை காலி செய்யும்படி நோட்டீஸ் வந்துள்ளது.

அப்துல் கயூம் (52) என்பவருக்கும் நோட்டீஸ் கிடைத்துள்ளது.  இவர் தனது வீட்டில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருவதாகக் கூறுகிறார்.

அலி ஜான் என்பவர்,  தனது தாத்தா மற்றும் அவரது தந்தை இந்த நிலத்தில் வசித்து வருவதாகவும், இதுபோன்ற எந்த  பிரச்சினையும் இதற்கு முன்  வநரத்தில்லை.  நாங்கள் ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்கிறோம்.  நாங்கள் எங்கே போவோம்?  இப்போது எங்களுக்கு தங்க எங் கள் தலைக்கு மேல் கூரை இல்லை,” என்றார் என்கிறது இந்தியா டுமாரோ!

-ஃபைஸல்

 

Comments