இந்து பெண்ணோடு பயணம் செய்த முஸ்லிம்   இளைஞரை தாக்கிய இந்துத்வா!

கடந்த நவம்பர் 24  அன்று, ஒரு இந்துப் பெண்ணுடன் பேருந்தில் பயணம் செய்ததற்காக முஸ்லிம் இளைஞரை பஜரங்கதளத் குண்டர்கள் சிலர் தாக்கியுள்ளனர்.  மங்களூருவின் நந்தூர் பகுதிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக மங்களூர் கிழக்கு காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.


துயரத்தில் இருக்கும் 20 வயதான சையத் ரசீம் உமர், போலீஸ் காவலில் வைக்கப்பட்டு மக்களிடம் கெஞ்சுவது போன்ற புகைப்படங்கள் இந்து சிறுமியின் புகைப்படம் ஆகியவை சமூக ஊடகங்களில் இந்துத்துவாவினரால் பகிரப்பட்டுள்ளன.

இந்துத்வா குழுவிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறுகிறார்  உமர். அடையாளம் தெரியாத 4-5 பேர் மீது ஐபிசி பிரிவு 323, 324, 504, 506, 34 ஆகிய பிரிவுகளின்  கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஏடிஜிபி அலோக் குமார் ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையில், இந்து குண்டர்கள் உமர் மீதான தாக்குதலுக்கு ஆரவாரம் செய்துள்ளனர் மற்றும் உமரை கைது செய்யுமாறு அவர்கள் கோரியுள்ளனர்.  இந்து தேசியவாதத்தின் எழுச்சியுடன் கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளன.

- ஃபைஸ்
 


Comments