ஜம்மு மற்றும் காஷ்மீரில்
அதிகரி்த்த வாக்காளர் எண்ணிக்கை!
ஜம்மு மற்றும் காஷ்மீர் (ஜே&கே) வாக்காளர் பட்டியலில் இதுவரை இல்லாத அளவிற்கு 10.19% வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீர்
யூனியன் பிரதேசத்தில் எல்லை நிர்ணயம் செய்த பிறகு சுமார் 7.72 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 75,86,899 திலிருந்து 83,59,771வரை-42,91,687 ஆண்கள், 40,67,900 பெண்கள் மற்றும் 184 மூன்றாம் பாலினமாக உயர்ந்துள்ளது.
ஐம்மு மற்றும் காஷ்மீர் வரலாற்றில் முதல் முறையாக, 11 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் ஒரு சிறப்பு சுருக்கத் திருத்த (எஸ்எஸ்ஆர்) காலத்தில் சேர்க்கப்பட்டன என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.
எல்லை நிர்ணயம் முடிந்ததைத் தொடர்ந்து, ஜூன் 10 அன்று ஜம்மு காஷ்மீரில் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) முன் திருத்தம் செய்ய உத்தரவிட்டது, இதில் முதன்மையாக 83 தொகுதிகளுக்கு முந்தைய தொகுதிகளின் தற்போதைய வாக்காளர் பட்டியலை எல்லை நிர்ணயத்திற்குப் பிந்தைய 90 தொகுதிகளுக்கு விவரணையாக்கம் (Mapping)செய்வதும் அடங்கும்.

தேர்தல் ஆணையம் புகைப்பட வாக்காளர் பட்டியலின் சுருக்கத் திருத்தத்திற்கு உத்தரவிட்டது. வரைவு பட்டியல் செப்டம்பர் 15 அன்று வெளியிடப்பட்டது, மேலும் 613 புதிய வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 11,370 ஆக உள்ளது. செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 25 வரை உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை தேர்தல் ஆணையம் கோரியது. அதைத் தொடர்ந்து நவம்பர் 10 வரை 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில், யூனியன் பிரதேசம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக படிவம்-6 மூலம் 11,40,768 கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 11,28,672 கோரிக்கைகள் ஏற்கப்பட்டன, 12,096 கோரிக்கைகள் மட்டுமே நிராகரிக்கப்பட்டன. இதில் 18-19 வயதுக்குட்பட்டவர்களில் 30,1,961 உரிமைகோரல்கள் அடங்கும். நீக்குவதற்கு மொத்தம் 41,2,157 கோரிக்கைகள் பெறப்பட்டன, அவற்றில் 35,8,222 ஏற்கப்பட்டன, மீதமுள்ளவை நிராகரிக்கப்பட்டன. “இதன் விளைவாக இறுதி வாக்காளர் பட்டியலில் 7,72,872 வாக்காளர்களின் நிகர அதிகரிப்பு ஏற்பட்டது, அதாவது வரைவுப் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 10.19% நிகர அதிகரிப்பு என்று தெரியவருகிறது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, பாலின விகிதம் 27 புள்ளிகள் அதிகரித்து இப்போது 948 ஆக உள்ளது, இது யூனியன் பிரதேசத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பாலின விகிதத்தை விட அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக, வாக்காளர் மக்கள் தொகை விகிதத்தில் 52% இல் இருந்து 58% ஆக 6% அதிகரித்துள்ளது.
இறுதிப் பட்டியலை வெளியிடுவதில் சிறப்பத் திருத்த சுருக்கம் முடிவடைந்தாலும், தொடர்ந்து புதுப்பிக்கும் செயல்முறை தொடரும் என்றும், வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட தகுதியுடைய குடிமகன் எவரேனும் முறைகளில் விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பிராந்தியத்தில் எல்லை நிர்ணய செயல்முறை அரசியல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. முன்னதாக, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள உள்ளூரைச் சேராதவர்களை வாக்காளர்களாக பதிவு செய்ய அனுமதிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தபோது எதிர்கட்சிகள் அதை பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாக விமர்சித்தன.
-அபு
Comments
Post a Comment