பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம்1 - அரசியல் அமைப்புக்கு எதிராக பேசும் பாஜக!
பொது சிவில் சட்டம்
கொண்டு வருவோம்1
- அரசியல் அமைப்புக்கு எதிராக பேசும் பாஜக!
குஜராத்
சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், பொது சிவில் ழ சட்டத்தை
அமல்படுத்துவது உள்ளிட்ட பல வாக்குறுதிகளை பாரதிய ஜனதா கட்சி
அறிவித்துள்ளது.
இ்ந்ந இந்துத்துவா அரசியல் கட்சி பல தசாப்தங்களாக
யூனிஃபார்ம் சிவில் கோட் (யுசிசி) அமல்படுத்துவதற்காக பிரச்சாரம் செய்து
வருகிறது, இது இந்து சட்டங்களை திணிப்பதற்கு சமமாக இருக்கும் என்று
சிறுபான்மையினர் நம்புகிறார்கள்.
கடந்த மாதம், குஜராத் உள்துறை
அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, மாநிலத்தில் யுசிசியை அமல்படுத்த ஒரு குழுவை
அமைப்பதாக அறிவித்தார். இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்
மாநிலங்களுக்குப் பிறகு இதுபோன்ற நடவடிக்கையை அறிவித்த- பாரதிய ஜனதா ஆட்சி
செய்யும் மூன்றாவது மாநிலம் ஆகும் குஜராத்!
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி,
" பிஜேபி அதன் 2019 லோக்சபா தேர்தல் அறிக்கையிலும், அது ஆட்சிக்கு
வந்தால் பொ.சி.ச வை ஐ செயல்படுத்தும் என உறுதியளித்திருந்தது." என
தெரிவித்திருக்கிறர்.
ஆயினும் , எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியலமைப்பு வல்லுநர்கள் இந்த நடவடிக்கை சிறுபான்மையினருக்கு எதிரானது என்று கூறியுள்ளனர்.
அனைத்திந்திய
முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகள், பிஜேமியின் இந்த அறிவிப்பு அரசியலமைப்புச்
சட்டத்திற்கு விரோதமான மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை என்று
சுட்டிக்காடரடியுள்ளன.
அரசியல அமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவது அதனை அவமானப்படுத்துவதேயகும். பாஜக இதனை ஆண்டாண்டுகளாக சொல்லி வருகிறது..
-ஹிதாயா
Comments
Post a Comment