"இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கிறது" -இந்தியாவை வச்சு செஞ்ச உலக நாடுகள்!


"இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கிறது"
-இந்தியாவை வச்சு செஞ்ச உலக நாடுகள்!



ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (

UNHRC) சர்வதேச காலமுறை மதிப்பாய்வின் (UPR) போது இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பதால் மத பாகுபாடு மற்றும் பாலியல் வன்முறை சம்பவங்கள் குறித்து கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் இந்தியாவை வலியுறுத்தியுள்ளன..

சிறுபான்மையினரின் உரிமைகள், பேச்சு சுதந்திரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றில் இந்தியாவின் மோசமான நிலைப்பாடு தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை பல நாடுகள்  எழுப்பின.



கடந்த செப்10  அன்று, உறுப்பு நாடுகள்  சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) உட்பட "பயங்கரவாத எதிர்ப்பு" சட்டங்களின் பரந்த பயன்பாட்டைக் குறைக்குமாறு இந்தியாவைக் கேட்டுக் கொண்டன.

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்து தேசியவாத அரசாங்கம் UAPA மற்றும் தேசத்துரோகம் போன்ற கொடூரமான சட்டங்களை விரிவாகப் பயன்படுத்துகிறது, குறிப்பாக முஸ்லிம் குழுக்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் குறிவைத்து, அவர்களுக்கு நியாயமான விசாரணைக்கு கூட வாய்ப்பளிக்காமல் உள்ளது என உறுப்பு நாடுகள் இந்தியா மீது பாய்ந்துள்ளன.

UN member states must demand accountability for India’s human rights record in upcoming UPR


" மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்(UAPA) மற்றும் அதே போன்ற கடும் சட்டங்களின் பரந்த பயன்பாட்டை இந்தியா குறைக்க பரிந்துரைக்கிறோம்," என்று மனித உரிமைகள் கவுன்சிலின் அமெரிக்க தூதர் மைக்கேல் டெய்லர் இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அவர், “சட்டப் பாதுகாப்புகள் இருந்தபோதிலும், பாலினம் மற்றும் மத சார்பு அடிப்படையில்  பாகுபாடு மற்றும் வன்முறை தொடர்கிறது.  பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் பயன்பாடு மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் ஆர்வலர்கள் நீண்டகாலம் காவலில் வைக்கப்படுவதற்கு வழிவகுக்கிறது.

அனைத்து பாலியல் வன்முறைச் சம்பவங களை விசாரிக்கவும், முஸ்லிம்களுக்கு எதிரான மத வன்முறைகள் உட்பட மத வன்முறைகளை விசாரிப்பதன் மூலம் மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் இந்தியாவை கனடா வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஒதுக்கப்பட்ட அல்லது ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் உரிமைகள் குறித்து அக்கறை கொண்டிருப்பதாக ஜெர்மனி கூறியுள்ளது.

சுவிட்சர்லாந்தோ"சமூக வலைதளங்களுக்கான திறந்த அணுகலை இந்தியா உறுதி செய்ய வேண்டும் மற்றும் இணைய இணைப்புகளை குறைக் கும் அல்லது தடை செய்யும் ( உ-ம்: காஷ்மீர்) எந்த நடவடிக்கைகளையும் ,மேற்கொள்ளக்கூடாது" என   அறிவுறுத் தியுள்ளது.இதற்கிடையில், கடந்த 2017 இல் நடைபெற்ற UPR இன் போது பகிர்ந்து கொள்ளப்பட்ட சில பரிந்துரைகளை இந்தியா செயல்படுத்தியதற்காக பல நாடுகள் பாராட்டியும் உள்ளன.

இதற்குப் பதிலளித்த இந்தியா, மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஆற்றிய பங்கைப் பாராட்டுவதாக- நாடு முழுவதும் மனித உரிமைப் போராளிகளை பல ஆண்டுகளாக, பல மாதங்களாக சிறைப் படுத்தி வைத்துக்கொண்டு . வெட்கமில்லாமல் ஐ.நா மன்றத்தில் கூறியுள்ளது.


"அனைத்து விதமான சித்திரவதையையும் இந்தியா கண்டிக்கிறது மற்றும்  தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதை, கற்பழிப்பு அல்லது பாலியல் வன்முறைக்கு எதிராக யாரும் மீற முடியாத நிலைப்பாட்டை இந்தியா நிர்வகிக்கிறது.”என்று இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கவுனசிலில் கூறியுள்ளார்.


நூற்றுக்கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் இந்தியா முழுவதும் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் சிறையில் வாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்  சர்வதேச காலமுறை மதிப்பாய்வு ஐ.நா உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் பதிவுகளை ஆய்வு செய்வதற்கான ஒரு வழிமுறையாகும்.  எந்தவொரு உறுப்பு நாடும் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் மதிப்பாய்வில் உள்ள நாட்டிற்கு பரிந்துரைகளை செய்யலாம்.

-ஃபைஸல்


Comments