பாபரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி!
பாபரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி!
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் மற்றும் பிற இந்துத்துவா பிரமுகர்களை விடுவித்ததற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வாதங்கள் முடிந்து கடந்த அக்டோபர் 31 அன்று தீர்ப்பை ஒத்திவைத்தது.
லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அயோத்தி யைச் சேர்ந்த ஹஜி மஹ்பூப் அகமது மற்றும் சையத் அக்லக் அகமது ஆகிய இரு முஸ்லிம்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ரமேஷ் சின்ஹா மற்றும் நீதிபதி சரோஜ் யாதவ் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.
ஹாஜி மஹ்பூப் அகமது மற்றும் சையத் அக்லக் அகமது ஆகியோர், 2020 ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடிப்பதற்காக சதித்திட்டம் தீட்டியதற்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி குற்றவாளிகளை விடுவித்த சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தனர்.
முஸ்லிம்கள் இருவரும் தங்களது மேல்முறையீட்டு மனுவில், தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் தங்களின் வரலாற்று வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இழந்த சாட்சிகள் என்றும் குறிப்பிட்டிருந்தனர் .
![]() |
| Convicts of Babri Masjid Demolition |
மேலும், தீ வைப்பு, கொள்ளை போன்றவற்றால் தங்கள் வீடுகள் அழிக்கப்பட்டதால், தங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்நிருந்தனர்.
2020 ஆம் ஆண்டில், 32 பேரும் குற்றவியல் சதி மற்றும் 1992 இல் முகலாயர் கால மசூதியை இடிக்க ஒரு கும்பலைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
டிச 6,1992ல், பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் பாபர் மசூதிக்கு அருகே ஒரு பேரணியில் கூடினர், மேலும் அவர்களில் ஒரு குழுவினர் மசூதியின் மீது ஏறி கோடாரி மற்றும் சுத்தியலால் மசூதியின் கும்பங்களை இடித்துத் தள்ளினர்.
இந்த இடிப்பு நாடு முழுவதும் முஸ்லீம்-விரோத வன்முறையைத் தூண்டியது, இதில் சுமார் 2,000 பேர் பலியாயினர். அவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் ஆவர்.
பாபர் தீர்ப்பு வெளியாகி மூன்றாண்டுகள் நிறைவடைகிறது. சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நவம்பர் 9, 2019 அன்று, உச்ச நீதிமன்றம் மசூதி இடத்தை இந்துக்களுக்கு வழங்கியது, பிஜேபிக்கு அதன் இந்துத்வா தேசியவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க வெற்றியைக் கொடுத்தது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் முழுவதையும் கோவில் கட்ட இந்துக்களுக்கு ஒதுக்க உத்தரவிட்டது. முஸ்லீம் குழுக்களும் மிக ஆர்வலர்களும் இந்தத் தீர்ப்பை "முஸ்லிம்களுக்கு எதிரான அப்பட்டமான அநீதி" என்று விமர்சித்தனர்.
உலகமே சாட்சியாக இருந்த பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு சதி திட்டம் தீட்டியதற்கான ஆதாரமில்லை என குற்றவாளிகளை நீதி மன்றம் விடுவிக்கிறதென்றால் இந்த அநீதி இந்தியாவில் மட்டும தான் நடக்கும்!

Comments
Post a Comment