அடங்காத மதவெறியன் நரசிங்கானந்த்..

 அடங்காத மதவெறியன் நரசிங்கானந்த்..

ஹரித்வார் தராம் சான்சாத்  இந்துத்வா மாநாட்டில் வெறுப்புணர்வைத் தூண்டும்  பேச்சு பேசிய வழக்கில், காஜியாபாத் தஸ்னாதேவி கோவிலின் பூசாரியான யதி நர்சிங்ஹானந்த் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார்.

அவர் வகுப்பு நல்லிணக்கத்தைத்  கெடுக்கக் கூடிய அல்லது அதுபோன்ற கூட்டங்களில்  ஆத்திரமூட்டும் வகையில் பேசக்கூடாது  என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் பெற்ற பின்பும்,  அண்மையில், டெல்லியில் உள்ள புராரி இந்து மகாபஞ்சாயத்தில்  முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துமாறு இந்துக்களை தூண்டிவிட்டுள்ளார்.சட்டத்தையும் நீதித்துறையையும் மதிக்காத மதவெறியன்!

Narasinganand


இது தவிர,கடந்த நவம்பர் 3, வியாழன் அன்று உத்தரபிரதேச காவல்துறை 'தர்ம சன்சத்' என்ற இந்துமத சமியார்களின் மாநாட்டையோ அல்லது அதற்கான  ஆயத்த கூட்டத்தையோ நடத்த வேண்டாம் என நோட்டீஸ் வழங்கி கேட்டுக்கொண்ட பின்பும், கடந்த நவ 3ம் தேதி " எந்த விலை கொடுத்தேனும் தர்ம சன்ஸாத்தை நடத்துவேன்" என சூளுரைத்துள்ளார் மதவெறி பிடித்த இந்த பூசாரி.

கடந்த ஜனவரி மாதம் ஹரித்வாரில் இவர் நடத்திய தரம் சன்ஸாத் மாநாட்டில் முஸ்லிமகளுக்கு எதிரான்இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதானால் தான் போலீஸ்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளுக்கும் நரசிங்கானந்த் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

மிகவும் வகுப்புவாத, பாலியல் மற்றும்  வன்முறை  அறிக்கைகளுக்குப் பெயர் பெற்ற நரசிங்கானந்த், மூன்று நாள் ‘தர்ம சன்சத்’ டிசம்பர் 17ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். அந்த நாள் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) முன்னாள் எம்பி பைகுந்த் லால் சர்மாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, ஹரித்வாரில் தர்ம சன்சத் தொடங்கியும்  இதே நாள்தான்.  அதில், முக்கிய இந்துமதத் தலைவர்கள், வலதுசாரி குழுக்கள், கடும்போக்கு இந்துத்வா அடிப்படைவாதிகள் மற்றும் இந்துத்துவா அமைப்புகள்,  வெறுப்பு பேச்சு, வன்முறை மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுக்கு அணிதிரட்டல் என ஒரு அசாதாரண சூழலை வெளிப்படுத்த ஒன்று கூடினர்.


இந்துத்துவா தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்து கலந்துகொள்ளும் தர்ம சன்சத்கள் அல்லது ‘மதப் பாராளுமன்றங்கள்’ அன்றிலிருந்து கவனத்தை ஈர்த்துள்ளன, உள்ளூர் நிர்வாகங்கள் இந்த நிகழ்வுகளை அவ்வப்போது தடை செய்கின்றன.

ஹரித்வார் தர்ம சன்சத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் ஆத்திரமூட்டும் பேச்சுகளை பேசியதற்காக நரசிங்கானந்த் மீது ஹரித்வாரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.  சமூகங்களுக்கு இடையே வேறுபாட்டை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு நிகழ்விலும் அல்லது கூட்டத்திலும் அவர் பங்கேற்க கூடாது என்பது அவரது ஜாமீன் நிபந்தனை.

அனுமதி தேவையில்லை, எந்த நிலையிலும் ஏற்பாடு செய்வோம்!
இருப்பினும், நரசிங்கானந்த் ஜாமீன் பெற்றதிலிருந்து பலமுறை வன்முறையை  தூண்டுகிற அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

  டிசம்பர் 6 ஆம் தேதி, மூன்று நாள் நிகழ்ச்சிக்கான திட்டங்களைத் தயாரிக்க ஒரு ‘ஆயத்த கூட்டத்திற்கு’ அழைப்பு விடுத்திருந்தார்.காஜியாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் (கிராமப்புறம்) இராஜ் ராஜா கூறுகையில், “அனுமதியின்றி, நூற்றுக்கணக்கான சாதுக்கள்  கலந்துகொள்ளும் மூன்று நாள் ‘தர்ம சன்சத்’ நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி வழங்காது.  மேலும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது கடினமான பணியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இன்னும்,

மேலும், உள்ளாட்சி அமைப்புத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் CrPC பிரிவு 144 இன் கீழ் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை  என்றும் ராஜ் கூறுகிறார்..

இதுகுறித்து நரசிங்கானந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோயில் வளாகத்தில் தர்ம சன்சத் கூட்டம் நடத்தப்படும்  இதற்கு அனுமதி தேவையில்லை.  மேலும், இது முதல் முறையாக நடத்தப்படவில்லை.  நாங்கள் அதை எந்த விலை பொடுத்தும் ஏற்பாடு செய்வோம்.  காவல்துறையும் நிர்வாகமும் இடையூறு ஏற்படுத்தினால், சாதுக்கள் ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள் என காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-ஃபைஸ்

Comments