தமிழ் சமூகத்திற்கான மு.க ஸ்டாலின் அரசின் சேவை இது!

தமிழ் சமூகத்திற்கான மு.க ஸ்டாலின்  அரசின் சேவை இது!


இளநிலை மருத்துவப் படிப்புக்கான பாடநூல்கள் தமிழில் தயாராகி வருவதாகவும்அதற்கான முன்முயற்சியாக முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பாடப் புத்தகங்கள் தமிழில் தயாராகி வருகிறன என்றும் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்த முயற்சி உள்ளபடியே வரவேற்கத்தக்கது. இந்தி திணிப்பை ஒன்றிய அரசு தீவிரமாக செயல்படுத்த முனையும் இத்தருணத்தில் இந்த முயற்சி என்பது அவசியம் தான்.

தமிழ்நாட்டில் 1835 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் (எம்.எம்.சி) தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே பழைமையான மூன்றாவது மருத்துவக் கல்லூரி இது. அப்படிப் பார்த்தால் 187 ஆண்டுகளாக சென்னையில் மருத்துவம் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதுவும் ஆங்கில மொழியில். கூடவே, 'சம்ஸ்கிருதம் கற்றால்தான் மருத்துவம் படிக்க முடியும்' என்ற நிலையும் நிலவியது. ஆனால் உலகின் மூத்த மொழியான தமிழில் மருத்வம் பற்றி அப்போது சிந்திக்க கூட இல்லை.

உலக நாடுகளில் பல சொந்த மொழிகளில் மருத்துவக் கல்வி கற்றுக்கொடுக்கப் படுகின்றன. மருத்துவம் சாராத பொறியிநல் உள்ளிட்ட ஏனைய படிப்புகள்  தமிழ் மொழியில் இருக்கும் போது மருத்துவ படிப்பும் தமிழ் மொழியில் கற்பிக்கப்படுவது தமிழ் கூறும் உலகிற்கு பயன்களை உருவாக்கும்.

"அறிவியல் உலகத்துக்கு நெருக்கமான மொழி ஆங்கிலம் என்பதால் இதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், சோதனை முயற்சியாகக்கூட நமது தாய்மொழியான தமிழில் மருத்துவம் கற்பிக்கப்படவில்லை என்பது துயரமான செய்தி இல்லையா?" என்றும் தனது ஏக்கத்தை வெளிபடுத்தியுள்ளார் அமைச்சர்.


தமிழ் வழியில் கல்லூரிகளில் கலை, அறிவியல் பாடங்களைப் படிக்கலாம் என்ற சட்டத்தை முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி கொண்டுவந்தார். ஆங்கில வழியில் படிப்பவர்களும் தமிழில் தேர்வு எழுத வழிவகுத்தார்.  இதேபோல, அவரது ஆட்சியில் தான்  சிவில் மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் படிப்புகளில் தமிழ்வழியில் கற்பிக்கும் முறை அறிமுகமானது. இப்போது, 'தமிழில் மருத்துவப் படிப்பு' என்பதில் ஒருபடி முன்னேற்றம் கண்டிருக்கிறது. இது முதல் முன்முயற்சி.

முதன்முதலாக சென்னையில் தமிழ்வழியில் மருத்துவக் கல்லூரியைத் தொடங்க முடிவு செய்திருக்கிறது தமிழக அரசு.

சமீபத்தில்,
மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் புத்தகங்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட முதலாம் ஆண்டுக்கான உடற்கூறியல், உடலியல், உயிர் வேதியியல் ஆகிய மூன்று புத்தகங்களை வெளியிட்டார்.

இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த மருத்துவப்   பாடப்புத்தகங்கள் மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் 13 மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்படவுள்ளன. சுமார், 97 மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள், நிபுணர்கள் இணைந்து, 5,568 மணி நேரத்திற்கும் மேலாக பணியாற்றி இந்த பாடங்களை இந்தியில் மொழிப் பெயர்த்திருக்கின்றனர்.
ஆக, இந்தி மொழியில் மருத்துவப் பாடங்கள் கற்பிக்க முயற்சியை மத்தியப் பிரதேச மாநிலம் மேற்கொள்ளும்போது உலகெல்லாம் பரவிக் கிடக்கும் தமிழ் மொழியில் மருத்துவக் கல்வி என்பது தமிழகத்தைத் தாண்டி தமிழ் சமூகத்துக்கு பலன்களைத் தரும். இது தமிழ் சமூகத்திற்கான மு.க ஸ்டலின் அரசின் சேவை. முதல்வர் மு.க. ஸடாலினின் முத்தான திட்டங்களில் இதுவும் ஒன்று!


Comments