துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்கள்!


உத்திரப் பிரதேசம்:
துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்கள்!


உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் 100 பேரை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஒன்பது கிறித்தவர்கள் மீது கடந்த அக் 28 அன்று வழக்கு பதிவு செய்துள்ளது உ.பி அரசு!

மீரட்டில் உள்ள பிரம்மபுரி காவல் நிலையத்திற்குட்பட்ட மங்காட்புரத்தில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த அக் 28ம்தேதி மாலை சுமார் 100 பேரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற வற்புறுத்தியதாக மூன்று பெண்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உ.பி அரசு கடந்த ஆண்டு புதிதாக இயற்றிய சட்ட விரோத மதமாற்ற தடைச் சட்டம், 2021 ன் பிரிவுகள் 3 மற்றும் 5 (1) ன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எஸ்பி (நகரம்) பியூஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

ஒரு மூத்த போலீஸ் அதிகாரி  கூறுகையில், "மங்காட்புரத்தைச் சேர்ந்த விக்ராந்த் உட்பட சுமார் 50 உள்ளூர்வாசிகள் 28ம்தேதி மாலை SSP அலுவலகத்திற்குச் சென்று, குடிசைவாசிகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும்படி சிலர் வற்புறுத்துவதாகக் குற்றம் சாட்டினார்

அவர்களில் ஒன்பது பேர் மீதும் அவர்கள் புகார் அளித்தனர்" என்று தெரிவித்துள்ளார். -அவர்களில் சாபிலி என்கிற ஷிவா, பின்வா, அனில், சர்தார், நிக்கு, பசந்த், பிரேமா, டிடாலி மற்றும் ரீனா ஆகிய அனைவரும் உள்ளூர்வாசிகள் என்று கூறுப்படுகிறது.

முக்கிய புகார்தாரர்களில் ஒருவரான விக்ராந்த், “கோவிட்-19 நெருக்கடியின் போது சேரியில் வசிக்கும் சிலர் எங்களுக்கு உதவினார்கள்.  வெளியாட்கள் சிலரின் ஆதரவுடன், அவர்கள் எங்களுக்கு உணவும், பணமும் வழங்கினர்.

விக்ராந்துடன் இருந்த மற்றொரு குடிசைவாசி, “சில நாட்கள் கழிந்த  பிறகு, அந்தப் பகுதியில்  (பிளாஸ்டிக் கூடாரத்தின் கீழ்)  அமைக்கப்பட்ட   ஒரு தற்காலிக தேவாலயத்தைப் பார்க்கச் சொன்னார்கள்.  எங்கள் கடவுள் மற்றும் தெய்வங்களை வணங்குவதை நிறுத்தவும், கிறிஸ்தவத்தை தழுவவும் அவர்கள் எங்களை வற்புறுத்த முயன்றனர்.  தீபாவளியின் போது கூட எங்களை மிரட்டினார்கள். " என தெரிவித்தார்.

ஆனால், கடந்த அக் 29ம் தேதியன்று  அந்த குடிசைப் பகுதிக்கு சென்றபோது, ​​ உள்ளூர்வாசிகள் இக் குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.  அவர்களில் ஒருவர், பெயர் வேண்டாம் என்ற நிபந்தனையுடன், “தற்காலிக தேவாலயத்தில் அவ்வப்போது பிரார்த்தனைகள் நடக்கும்.  சில குடிசைவாசிகள் விருப்பத்துடன் கலந்து கொண்டனர் ஆனால் அப்படி யாரும் மதம் மாற்றப்படவில்லை." என்று சொன்னதாக கூறுகிறார் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியாளர்.



Comments