அஸ்ஸாம்: கிறித்தவ மிஷனரிகளுக்கு எதிரான பிஜேபி அரசின் அடக்குமுறை!

Swedish Missionaries

 அஸ்ஸாம்: கிறித்தவ மிஷனரிகளுக்கு எதிரான பிஜேபி அரசின் அடக்குமுறை!

கடந்த மாதம், அசாம் போலீசார் 10 வெளிநாட்டவர்களை கைது செய்து நாடு கடத்தினர்.

அக்டோபர் 26 அன்று, மேல் அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள பல தேயிலைத் தோட்டங்களைக் கொண்ட நம்ரூப் என்ற இடத்தில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மூன்று  பிரஜைகளை போலீஸார் கைது செய்தனர்.  ஒரு மதக் கூட்டத்தில் உரையாற்றியதன் மூலம் அவர்கள் விசா விதிமுறைகளை மீறியதாகக் காவல் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

காவல்துறையின் சிறப்பு இயக்குநர் ஜெனரல் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஜி.பி. சிங்  கூறுகையில், “கிறிஸ்தவ மிஷனரிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பழங்குடியினப் பகுதிகளுக்கு மக்களை பிரச்சாரம் செய்ய அனுப்புகிறார்கள்” என்று போலீசாருக்கு தகவல் வந்த்தாகவும் , அதனால் அவர்கள் “உளவுத்துறையை உஷார் படுத்தி ஸ்வீடன் டூரிஸ்டுகளை கைது செய்ததாகவும் மீடியாக்களிடம் தெரிவித்துள்ளார்.மேலும், " பின்னர் அக்டோபர் 28 அன்று, விசா விதிமுறைகளை மீறி மிஷனரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஏழு ஜேர்மனியர்களை அஸ்ஸாம் காவல்துறை கைது செய்தது.  மத நடவடிக்கைகளை அனுமதிக்கும் M1 அல்லது மிஷனரி விசா ஜேர்மனியர்களிடம் இல்லை "என்றும் சிங் கூறியுள்ளார். அதோடு  வெளிநாட்டைச் சேர்ந்த 10  பயணிகள்  நாடு கடத்தப்படுவதற்கு முன்பு 500 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர்.

அதகாரப்பூர்வ  குற்றச்சாட்டுகள் விசா மீறல்களை உள்ளடக்கியதாக இருந்தாலும், அவர்கள் மக்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றம் நோக்கம் கொண்டிருந்தார்களா  என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அஸ்ஸாமில் மத நிகழ்ச்சிகளுக்கு ஜெர்மானியர்களை அழைத்ததற்காக ஜார்கண்டின் ஆதிவாசி சுற்றுலா வழிகாட்டியான 35 வயதான முகுத் போத்ரா மற்றும் அஸ்ஸாம்ஆங்லாங் மாவட்டம்   கர்பியின் டோலமாரா பகுதியைச் சேர்ந்த தேவாலயத்தின் தலைவரான   55 வயதான ஃபாதர்  போர்னபாஸ் தெராங் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர் -     அவர்கள் மாநிலத்தில் வெகுஜன மதமாற்றங்களை செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தனர் என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153A (மதத்தின் அடிப்படையில் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 120B (குற்றச் சதி) மற்றும் 295A (மத உணர்வுகளை சீண்டுதல்) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



இந்தியாவின் பல  மாநிலங்களில் இருப்பதைப் போல், அசாமில் மதமாற்ற எதிர்ப்புச் சட்டம் இல்லை இந்தியாவின் பல மாநிலத்தின் மதமாற்றச் சட்டம், கட்டாய மதமாற்றம் கிரிமினல் குற்றம் என்கிறது.

இந்து வலதுசாரிக் குழுக்கள் அத்தகைய சட்டத்தை  கொண்டுவர இது போன்ற  சம்பவங்களைப் பயன்படுத்தியுள்ளன.  அஸ்ஸாமின் பிஸ்வா ஹிந்து மகாசங்காவின்  பொதுச் செயலாளர் பாலேன் பைஷ்யா, "அஸ்ஸாமுக்கு வெளிநாட்டினர் வந்து மக்களை கிறித்தவர்களாக மாற்றுவது  இது முதல்முறையல்ல; பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மாநில அரசாங்கத்தின் கண்டிப்பு காரணமாக இந்த முறை அவர்கள் பிடிபட்டனர்" என்கிறார்.

தேநீர் மற்றும் மத நம்பிக்கை


அஸ்ஸாமில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகள் 1600 களில் கிறித்துவம் இப்பிராந்தியத்திற்கு வந்ததை சுட்டிக்காட்டுகின்றன.  ஆனால் 19 ஆம் நூற்றாண்டிலிருந்தே மிஷனரிகள் இப்பகுதியில் மிகவும் நிறுவனமயப்பட்ட பிரசன்னமாக மாறியன.

காலனி நிர்வாகம் தேயிலைத் தோட்டங்களை நிறுவியதால், உள்ளூர் சமூகங்களிடையே மத நம்பிக்கையைப் பரப்ப மிஷனரிகளை ஊக்குவித்தது.  அஸ்ஸாமில் உள்ள கிறிஸ்தவ சமூகம் பள்ளிக்கூடங்பளை நிறுவி, இப்பகுதியில் கல்வியறிவைப் பரப்பியது.

இன்றைய ஜார்கண்டில் உள்ள சோட்டா நாக்பூர் பீடபூமியில் இருந்து தேயிலை தோட்டங்களுக்கு ஆதிவாசி தொழிலாளர்களையும் காலனித்துவ அரசாங்கம் அழைத்து வந்தது.  பல தலைமுறைகள் தோட்டங்களில் பணிபுரிந்த பிறகு, இந்த சமூகங்கள் தேயிலை பழங்குடியினர் என்று அறியப்பட்டன, அவர்களில் சிலர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு அரசாங்கங்கள் கிறிஸ்தவ அமைப்புகளின் மிஷனரி வேலைகள் ஒரு இடைஞ்சலாகக்  கருதவில்லை.  பெயர் குறிப்பிட விரும்பாத  ழ குவஹாத்தியை தளமாகக் கொண்ட ஒரு கிறிஸ்தவ அமைப்பு, இதுவரை போலீஸ் அடக்குமுறை இருந்ததில்லை என்கிறது.

"கடந்த மாதம் நாடு கடத்தப்பட்ட ஏழு ஜேர்மனியர்கள் ஒவ்வொரு ஆண்டும் அஸ்ஸாமுக்கு வரும் லூத்தரன் தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பல மனிதாபிமான திட்டங்களை வைத்திருக்கிறார்கள்," என்று கூறும் பெயர் வெளியிட விரும்பாத கர்பி ஆங்லாங் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாஸ்டர்.  "மருத்துவ மனைகள், சமூக மற்றும் கல்வித் துறை சார் திட்டங்கள் போன்ற திட்டங்களை தொடங்கும் அவர்கள் ஒவ்வொரு வருடமும் வழக்கமான சோதனைக்காக வருகிறார்கள்." என்கிறார்.

இந்த ஆண்டு, அவர்கள் மார்கெரிட்டா, டின்சுகியா மற்றும் கர்பி அங்லாங் மாவட்டங்களுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

"நாங்கள் எந்த வேதசெய்தியையும் பரப்பவில்லை. நாங்கள் தேவாலயங்களுக்குச் சென்று சக கிறிஸ்தவர்களுடன் கொண்டாடினோம் அவ்வளவுதான்.  நாங்கள் வேறு எதுவும் செய்யவில்லை." என ஜெர்மன் நாட்டின் சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் நியூஸ் லைவ் டிவியிடம் தெரிவித்திருக்கிறார்.

அதிகாரிகளின் துன்புறுத்தல்கள்


   மத மாற்ற முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குவாஹாட்டியைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் செய்தித் தொடர்பாளர்,

"இந்து கோவில்களுக்கு வரும் வெளிநாட்டவர்களும் தடை செய்யப்படுவார்களா?   சில கடுமையான குற்றச்சாட்டுகள் எங்களை நோக்கி முன்வைக்கப்படுகின்றன,  நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்.  மதமாற்றக் குற்றச்சாட்டுகள் இருப்பதாக காவல்துறை ஊடகங்களுக்கு செய்தியை கசியவிடுகிறது.  ஜெர்மானியக் குழு கிறிஸ்தவர்களைச் சந்தித்தபதும் இரண்டு கிறிஸ்தவக் குழுக்கள் சந்தித்துக் கொளவதிலும் என்ன மாற்றம் இருக்கிறது?  மதமாற்றம் நடந்திருந்தால், [மதமாற்றம் செய்யப்பட்ட] மக்களுடன்  போலீஸ் வரட்டும்." என கொந்தளிப்பை வெளிப்படுத்துகிறார்.

போலீசுக்கு பயந்து தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத கர்பி அங்லாங் மாவட்டத்தைச் சேர்ந்த பாப்டிஸ்ட் பாஸ்டர் ஒருவர்,  பாஜக அரசின் இந்துத்துவா அரசியலே இந்த அடக்குமுறைக்குக் காரணம் என்று கூறுகிறார்.

"மிஷனரிகளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இதற்கு முன்னர் இப்பகுதிக்குச் சென்று மத மாநாடுகளில் பங்கேற்றுள்ளனர், அதிகாரிகளால் விசாரிக்கப்படாமலும் கைது செய்யப்படாமலும் அவர் கூறினார்.

"இது அவர்களின் காலம்; அவர்களின் ஆட்சி். எனவே அவர்கள் இந்தியாவை ஒரு முழுமையான இந்து நாடாக மாற்ற முடிந்த அனைத்தையும் செய்வார்கள்," என்று அவர் பாஜக அரசாங்கத்தைக் குறிப்பிடுகிறார். மேலும்,  “2014 முதல், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இது அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையது.  2014-ம் ஆண்டு என்பது மத்தியில் பாஜக முதன்முதலில்ஆட்சிக்கு வந்த வருடமாகும்." என அவர் கூறுகிறார்.


மேலும், பாஸ்டர் தொடர்ந்து்" உள்ளூர் கிறிஸ்தவர்களை துன்புறுத்த ஓட்டைகளை பாதுகாப்பு ஏஜென்சிகள் தேடும் நிலையில், நானும் போலீஸ் கண்காணிப்பில்   இருக்கிறேன்.  அஸ்ஸாமில் மதமாற்றங்கள் பற்றிய எச்சரிக்கை இருந்தபோதிலும், மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 3% கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

அவர்கள், அஸ்ஸாமில் மதமாற்றங்களை நிறுத்த முயல்கிறார்கள்.  “மதமாற்ற எதிர்ப்பு மசோதா இருந்தாலும், இந்திய அரசியலமைப்பு கருத்து சுதந்திரம், நம்பிக்கை மற்றும் [மத] நடைமுறைகளை பின்பற்ற உரிமை வழங்குகிறது.  வெளிநாட்டினர் ஏன் அபராதம் விதிக்கப்பட வேண்டும் அல்லது காவலில் வைக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை  புரிந்துக்கொள்ள முடியவில்லை."என்கிறார்.

 
அஸ்ஸாம முடிந்து விட்டது.

கடந்த அக்டோபர் 31 அன்று செய்தி சேனல்களிடம் பேசிய சிங், "வெளிநாட்டினர் கலந்து கொள்ளும் மதக் கூட்டங்களைக் கண்காணிக்க மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் அவர்கள் மிஷனரி விசா இல்லாமல் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படவில்லை.    மத மாற்றம் மிஷனரி விசாக்கள் உட்பட அனைத்து வகையான விசாக்களின் கீழும் தடைசெய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

விசா மீறல்கள் அதிகரித்து வருகிறதா என்று கேட்கப்பட்டபோது, ​​சிங், "அவை   அதிகரித்து வருகிறதா  அல்லது  அரசாங்கமும் காவல்துறையும் முனைப்புடன் செயல்படுகிறதா என் பது நீங்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம்   " என்று தெரிவித்துள்ளார்.

   மதமாற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் சமிக்ஞை செய்தாலும், இந்துத்துவா குழுக்கள் மற்றும் இணையதளங்கள் அசாமில் கிறிஸ்தவம் பரவுவது குறித்து அவ்வப்போது பீதியை கிளப்பி வருகின்றன.

கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆக்கிரமிப்பு  பற்றி பேசும் பைஷ்யா,  “இஸ்லாமிய ஜிகாத்தை விட பிற மதத்தினரை கிறிஸ்தவர்களாக மாற்றும் வேகம் மிகவும் ஆபத்தானதுமேல் அஸ்ஸாம் (Upper Assam) முடிந்து விட்டது" என்கிறார்.

நானும் கூட, விரைவான வேகமான மதமாற்றத்தைப் பற்றிய அவரது கூற்றுகளை உறுதிபடுத்த  அவர் எந்த  தரவை முன்வைக்கவில்லை.  இருந்தபோதிலும், அசாமில் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர அவரது அமைப்பு அழுத்தம் கொடுத்து  வருகிறது.  "மாநில சட்டசபையில் மதமாற்ற சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால், பழங்குடியின இந்துக்கள் அசாமில் வாழ மாட்டார்கள்," என்றும்  கூறும் பைஷ்யா,
ஒரு எச்சரிக்கையாக, தனது அமைப்பு கட்டாய மதமாற்றத்திற்குதான் எதிரானது  தானாக முன்வந்து மதம் மாறுவதற்கு எதிரானது அல்ல என்றும் கூறுகிறார்.


வதந்திகள் மற்றும் குற்றச்சாட்டுகள் அசாமில் உள்ள கிறிஸ்தவ சமூகத்திற்கு எப்படி அநீதி இழைத்தன என்று கிறிஸ்தவ அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகிறார்.

மாநிலத்தில் அசாமிய மொழியைப் பாதுகாக்க பாப்டிஸ்ட் மிஷனரிகள் அதிகம் பங்களிப்பு செய்திருப்பதாக  அவர் சுட்டிக்காட்டும் அவர், இதற்காக  அசாமிய பெரும் சமூகம் நன்றியுள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும்.

மிஷனரிகள் இப்போது அஸ்ஸாமுக்கு வந்தவையல்ல; அவை 1600 ஆம் ஆண்டிலிருந்து இருக்கின்றன. இன்று, அவர்கள் மிஷனரிகள் வருவதைப் பற்றி கூச்சலிடுகிறார்கள், ஆனால் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் அவர்களின் பங்களிப்பைப் புறக்கணிக்கிறார்கள்." என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

Comments