எதிர்கட்சி எம்எல்ஏக்களை விலைக் கு வாங்கும் பிஜேபியின் கேவல அரசியல் - ஆதாரம் வெளியிட்ட தெலுங்கானா முதல்வர்!

எதிர்கட்சி எம்எல்ஏக்களை விலைக் கு வாங்கும் பிஜேபியின்
கேவல அரசியல்
- ஆதாரம் வெளியிட்ட தெலுங்கானா முதல்வர்!

தனது கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பிஜேபி சார்பாக நியமிக்கப் பட்ட அரசியல்தரகரான ராமச்சந்திர பாரதி என்பவர் பேரம் பேசிய வீடியோவை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ்

அதில, ராவின் டிஆர்எஸ்  கட்சி எம்எல்ஏ தந்தூர் எம்எல்ஏ ரோஹித் ரெட்டியை சந்திக்கும பாரதி, இரண்டு ஆப்ஷன் முன்வைக்கிறார். பிஜேபியோடு  பாதுகாப்போடு இருக்க வேண்டுமா  அமலாக்கத்துறையின் கண்காணிப்பில இருக்க வேண்டுமா என்று கூறுவதாக சொல்லும் ராவ், இந்த. வீடியோவை உச்ச நீதிமன்ற,உயர் நீதி மன்ற நீதிபதிகள், அனைத்து மாநில முதலவர்களுக்கு அனுப்பி வைக்கப் போவதாக கூறியுள்ளார்
TRS Chief showing Video Clip
8 மாநிலங்களில் எதிர கட்சி எம்எல்ஏக்களை இப்படி விலைக்கு வாங்கித்தான் ஆட்சியைப் பிடித்திருக்கிறது பிஜேபி.

டிஆர்எஸ் தலைவர் மற்றும் தெலுங்கானா முதல்வரான கேசிஆர் அக்டோபர் 26 அன்று நடந்த இந்த  சம்பவத்திற்கு கடுமையான எதிரவினையாற்றியுள்ளார்.   டிஆர்எஸ் எம்எல்ஏக்களை பணம் மற்றும் ஒப்பந்த (contract)    ஆசைகாட்டி கட்சிக்குள் இழுக்க பாஜக முயற்சிப்பதாக அவர்  குற்றம் சாட்டியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மற்றும் அனைத்து மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பிற மாநில முதல்வர்களுக்கும் வீடியோக்கள் அனுப்பப்பட்டு  வருகிறது .

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது தொடர்பாக ஒரு மணி நேர வீடியோ உள்ளது.  நாட்டில் உள்ள அனைத்து செய்தி ஏஜென்சிகள் மற்றும் முதல்வர்களுக்கு வீடியோக்களை அனுப்பி வருகிறோம்.   

  இந்த நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்.உச்சநீதிமன்றம் உட்பட  நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் வீடியோவை அனுப்புவேன்.   மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கும் வீடியோவை அனுப்புவேன்,'' என கொந்தளித்துள்ளார் கேசிஆர்.

மேலும், ராமச்சந்திர பாரதி என்ற ஒரு புரோக்கர், எங்கள் கட்சியின் தந்தூர் எம்எல்ஏ ரோஹித் ரெட்டியை   சந்தித்தார்.  ரெட்டி எங்களிடம் புகார் செய்தார், நாங்கள் அதை உள்துறை அமைச்சகத்திற்கு கொண்டு சென்றோம்.  இனி பாஜகவிடம் ஒருவர் ஆட்சியை இழக்க முடியாது.

கேரளாவில் பாஜக சார்பில் போட்டியிட்ட துஷார் வெள்ளபள்ளியும் டிஆர்எஸ் எம்எல்ஏக்களிடம் பேசி வாக்குறுதிகளை அளித்துள்ளார் என்றும் கேசிஆர் தெரிவித்துள்ளார்.இது சாதாரண விஷயமல்ல என்று கூறியுள்ள கேசிஆர்,

இந்தக் காணொளிகளில் அரசாங்கம் எந்த வகையில் கவிழ்க்கப்பட்டது என்ற அம்சங்களும் விளக்கப்பட்டுள்ளதாகவும்,  அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான
Rohit Reddy

இந்த சக்திகளை தடுத்து நிறுத்தாவிட்டால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக அமையும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

நாட்டில் பதற்றமான சூழ்நிலைகள் உள்ளன.  நாட்டில் ஜனநாயகம் கொல்லப்படுகிறது.  மிகுந்த வேதனையுடன் பேசுகிறேன்.  அத்தகைய தீமை இருக்க முடியும் என்று என்னால் நம்ப முடியவில்லை.  வேலையின்மை அதிகரித்துள்ளது.  ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.  பாஜக நாட்டை அனைத்து துறைகளிலும் அழித்துவிட்டது.  "தேர்தல்கள் வரும், போகும், ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும்  வெற்றி பெற பாஜக  யாரும் எதிர்பார்காகாத  சதிச்செயல்களை   செய்து வருகிறது" என்றும் விளாசியருக்கிளார்  கேசிஆர்

.முனுகோடு இடைத்தேர்தலில் இதுவரை கண்டிராத சம்பவங்கள் நடந்துள்ளன என்றும கூறியிருக்கிறார் ராவ்.

 

Comments