ஆபத்தான நிலையில் சிறையில் இருக்கும் பிஎஃப்ஐ தலைவர்!
ஆபத்தான நிலையில் சிறையில் இருக்கும் பிஎஃப்ஐ தலைவர்!
கேன்சர், பார்கின்சன்(நரம்புத் தளர்ச்சி நோய்), நீரிழிவு, ஞாபக மறதி…” என அமல் தஹ்சீன் தனது தந்தையின் நாள்பட்ட நோய்களுக்கு பெயரிட முயற்சிக்கிறார்.
கடந்த மாதம் ஒன்றிய அரசு தடை செய்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா -வின் நிறுவனத் தலைவர் எரப்புங்கல் அபுபக கரின் மகன் தான் அமல் தஹ்சீன்.
அபுபக்கர்...70 வயதான முஸ்லீம் இயக்கத் தலைவர். இந்தியாவின் பயங்கரவாதச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) மற்றும் தேசிய புலனாய்வு முகமைச் சட்டம் ஆகியவற்றின் விதிகளின் கீழ் தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டருக்கிறார்.
அபுபக்கர் தனது மூன்று தசாப்தகால அரசியல் தலைமைத்துவத்தில், அவர் ஒரு வழக்கில் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை.
"அவர் வெளிர் நிறமாகி உடல் எடையை குறைந்துவிட்டார். அவர் நீண்ட காலம் சிறையில் இருக்க முடியாது, ”என்று புலம்புகிறார் 33 வயது அமல் தஹ்சீன்.
மருத்துவ காரணங்களின் அடிப்படையில் அபுபக்கர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கடந்த வாரம் விசாரணை நீதிமன்றம் NIA க்கு உத்தரவிட்டது. அபுபக்கர் பல நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் மருத்துவப் பதிவுகளை அவரது குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டதாக மக்தூப் என்ற டெல்லியைத் தளமாக்க் கொண்டு இயங்கும் இணையதள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 22 அன்று, பிஎஃப்ஐக்கு எதிரான நாடு தழுவிய ரெய்டில் NIA வால் முதலில் கைது செய்யப்பட்ட PFI தலைவர்களில் அபுபக்கரும் ஒருவர். 10 மாநிலங்களில் ஏறக்குறைய 100 PFI செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர் அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்
இந்த நடவடிக்கையை "இதுவரை இல்லாத மிகப்பெரிய விசாரணை செயல்முறை இது" என என்ஐஏ கூறியிருந்தது.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொடுவள்ளி என்ற ஊரில் உள்ள அவரது இல்லத்தில் கொச்சி மற்றும் டெல்லியைச் சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் உள்ளூர் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் உதவியுடன் அதிகாலை 3 மணியளவில் சோதனை நடத்தினர். அதிகாலை 5:05 மணிக்கு அபுபக்கர் கைது செய்யப்பட்டு பின்னர் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தொடர்ந்து, செப்டம்பர் 28 அன்று, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ரிஹாப் இந்தியா பவுண்டேஷன், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், தேசிய மனித உரிமைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு, தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன் மற்றும் ரிஹாப் ஃபவுண்டேஷன்,
கேரளா, பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை ஒன்றிய தடை செய்தது.
அபுபக்கர் இந்த அமைப்புகள் அனைத்திற்கும் ஸ்தாபக தலைவர் அல்லது புரவலராக இருந்துள்ளார். இந்நிறுவனங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு "சட்டவிரோத அமைப்புகள்" என்று அறிவிக்கப்பட்டன.
பெரும்பாலான நாட்கள் போலீஸ் காவலில் இருந்தபோதும், இப்போது நீதிமன்றக் காவலில் உள்ளபோதும், மோசமான உடல்நிலை காரணமாக அபுபக்கர் மருத்துவ வசதிகள் தேவைப்படுபவராக இருக்கிறார்.
தனது தந்தைக்கு எதிரான பயங்கரவாத நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுக் கும் தஹ்சீன் , இந்திய சமூகத்தின் பின்தங்கிய வகுப்பினரை மேம்படுத்துவதில் தான் தன் தந்தை உறுதியாக இருந்ததாகக் கூறுகிறார்.
2020 இல் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அபுபக்கர் குடும்ப உறுப்பினர்களின் தீவிர கவனிப்பின் கீழ் வீட்டிலேயே இருந்துள்ளார். அவர் தனது படிப்பிற்காக இரண்டு சிறப்பு சாய்வு நாற்காலிகளை வைத்திருந்தார். குறிப்பிட்ட தனது நிலையை பராமரிக்க ஷாமியானா வீட்டில் ஷாமியானா அமைத்திருந்தார்.
"திறந்த அறுவை சிகிச்சையின் போது அவரது வயிறு 80% அகற்றப்பட்டது. அதன் பிறகு, அவர் 35 டிகிரி கோணத்தில் மட்டுமே படுக்க முடியும்" என்று கூறும் அபுபக்கரின் மகள் ஷபீனா, தனது தந்தை இப்போது தரையில் உறங்குகிறார் என்பதை அறிந்ததிலிருந்து மிகவும் வேதனையாக உள்ளது என்கிறார்.
அபுபக்கருக்கு ,தீவிரமான உணவுக்கட்டுப்பாடு உள்ளது, அது அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து சீர்குலைந்திருக்கிறது.
MVR புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆலோசகரும், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் தலைவருமான திலீப் தாமோதரனின் மருத்துவச் சான்றிதழில், அபுபக்கருக்கு மூன்று மாத செக்அப்கள் தேவைப்படுகின்றன. மேலும் CT ஸ்கேன் - மார்பு வயிறு மற்றும் இடுப்புக்கு மேல் GI எண்டோஸ்கோபி அடுத்த மாதம் வருடாந்தர ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்" என்கிறார்.
மற்றொரு மருத்துவச் சான்றிதழில் அவரது பார்கின்சன் நோயின் நிலை மற்றும் மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பல்வேறு நிலைமைகள் காரணமாக அபுபக்கருக்கு மருத்துவ உதவியை நான்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
"நாங்கள் அவரைச் சந்தித்தபோது, "போர்வை" என்ற வார்த்தை அவருக்கு நினைவில் இல்லை. அவர் தனது பேரக்குழந்தைகளின் பெயரைக் கூட மறந்துவிட்டார்,” என்கிறார் PFI யின் முன்னாள் உறுப்பினரும் அபுபக்கரின் மருமகனுமான டிடி முனீப்.
அபு சாஹிப் என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் அபுபக்கரைக் கைது செய்திருப்பது தொண்டர்களின் மனஉறுதியை குலைப்பதற்காகவே என்கிறார்கள் PFI யின் முன்னாள் தலைவர்கள்.
நாங்கள் நீண்ட காலமாக தடையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். சங்பரிவாருக்கு எதிரான எங்களின் அசைக்க முடியாத நிலைப்பாட்டிற்கான அங்கீகாரமாக இதை நாங்கள் பார்க்கிறோம்,” என்று பிஎஃப்ஐயின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்.
அபுபக்கரின் நிலைமைகள் அமைப்பின் செயல்பாட்டாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவை.
முன்னாள் அரபு மொழி ஆசிரியரான அபுபக்கர்,
SDPI கட்சியின் நிறுவன தலைவராகவும், தேசிய வளர்ச்சி முன்னணியின் (NDF) நிறுவன தலைவராகவும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவராகவும் (2007, 2017 & தடை வரை தேசிய செயற்குழு உறுப்பினராகவும்) ரிஹாப் இந்தியா அறக்கட்டளையின் நிறுவன தலைவராகவும், அகில இந்திய மில்லி கவுன்சிலின் செயலாளராகவும் (2005), இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் மாநிலத் தலைவராகவும் (1982); அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிறுவன உறுப்பினராகவும், தேஜஸ் டெய்லி நாளிதழின் நிர்வாக ஆசிரியராகவும் (2006) மற்றும் இந்தியா நெக்ஸ்ட் ஹிந்தி இதழின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.
UAPA விதிகளின் கீழ் செப்டம்பர் கடைசி வாரத்தில் பிஎஃப்ஐ தடை செய்யப்பட்டதிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஏராளமான உறுப்பினர்கள் கைது செய்யப்படுகிறார்கள். தடைக்கு முன், பிஎஃப்ஐ 20 மாநிலங்களில் செயலில் இருந்தது. இந்தியாவின் இந்து தேசியவாத ஆட்சியின் பல விமர்சகர்கள் பிஎஃப்ஐ யின் தடையை கேள்வி எழுப்பியுள்ளனர்.
நன்றி: மக்தூப் மீடியா
- ,ஃபைஸல்
Comments
Post a Comment