டெல்லி: இடிக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள் - போலீஸ் அராஜகம்!
- Get link
- X
- Other Apps
டெல்லி:
இடிக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள்
- போலீஸ் அராஜகம்!
கடந்த அக்டோபர் 21 அன்று, முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் தென்மேற்கு தில்லியின் காரக் ரிவாரா சத்பரி பகுதியில் தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) ஏராளமான காவல்துறையினருடன் சென்று, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி -
முஸ்லிம் ஆண்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த சென்றிருந்த நிலையில் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளை இடித்ததாக உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
Demolished House
உண்மை அறியும் ஆர்வலர்கள் குழு சத்தர்பூரின் ஃபதேபூர் பகுதியை பார்வையிட்டது. DDA அதிகாரிகள் குடியிருப்பாளர்களுக்கு எதிராக மூர்க்கமான முறையில் வீடுகளை இடித்துத் தள்ளியதாக குற்றம் சுமத்தியுள்ளது.
“அப்பகுதியில் வலுக்கட்டாயமாக புகுந்த தில்லி போலீசார் தடியடி நடத்தி பெண்கள் உட்பட பலரை காயப்படுத்தியுள்ளனர். மேலும் ஆண் போலீசார் கூச்சமோ மனிதாபிமானமோ இல்லாமல், தங்கள் வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தாக்கியுள்ளனர். இடிந்த வீடுகளிலிருந்து தங்கள் வீட்டுப் பொருட்களை மீட்கக் கூட அப்பெண்களுக்கு அவகாசம் வழங்கவில்லை. டிடிஏ அதிகாரிகள் தீபாவளிக்குப் பிறகு மீண்டும் புல்டோசர்களுடன் திரும்பி வந்து மேலும் வீடுகளை இடிக்கப்போவதாக மிரட்டிவிட்டுச் சென்றனர்” என்று உண்மை அறியும் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பல்வேறு உரிமை செயல்பாட்டாளர்களைக் கொண்ட இக்குழுவில் அகில இந்திய தொழிற்சங்கங்களின் மத்திய கவுன்சிலின் (AICTU) ஆகாஷ் பட்டாச்சார்யா, நீதிக்கான அகில இந்திய வழக்கறிஞர்கள் அமைப்பின் (AILAJ), அனுபிரதா, அகில இந்திய மாணவர் சங்கத்திலிருந்து (AISA) நௌஷாத் அகமது ராசா மற்றும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்கத்திலிருந்து (AIPWA) சுமன் கோஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மக்தூப் என்ற இணையதள ஊடகத்திடம் பேசிய அனுபிரதா, ஆண் போலீஸ்காரர்களால் பெண்கள் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும், பல பெண்கள் படுகாயமடைந்ததாகவும் ஒரு பெண் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சில மணி நேரம் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
“அனைத்து பெண்களும், தங்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வெளியே எடுத்துக்கொள்கிறோம் என்று அதிகாரிகளிடம் கெஞ்சியபோதும், அதைச் செய்ய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று சொன்னார்கள். ஏதேனும் இடிப்பு உத்தரவு அல்லது நோட்டீஸ் இருக்கிறதா என அவர்கள் கேட்டபோது அதிகாரிகள் எதையும் காட்டவில்லை என்று அவர்கள் கூறினர். குடியிருப்பாளர்களை அடித்து நொறுக்கிய பிறகு இடிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இடிப்பின்போது போலீஸ் படை பெருமளவில் குவிக்கப்பட்டிருக்கிறது,” என்று அனுபிரதா கூறியுள்ளார்.
இந்த நிலம் சில தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது எனவும் இந்த நிலம் யாருக்கு சொந்தமானது, எந்த அளவுக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை அளவீடு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவும் இந்த இடிப்பிற்கு
அதிகாரிகள் காரணம் கூறியுள்ளாக கூறும் உண்மை அறியும் குழுவின் அனுபிரதா,
“இது தொடர்பாக அதிகாரிகள் இதுவரை எந்த ஆய்வும் நடத்தவில்லை. எந்த செயல்முறையும் பின்பற்றவில்லை, ”என்று தெரிவித்துள்ளார்.
இடிப்பு தொடர்பாக, கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சட்டத்தின்படி அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது மாநிலத்தில் எடுத்தது போல் புல்டோசர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று குடியிருப்பாளர்கள் அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்"என்கிறது உண்மை அறியும் குழு.
வெள்ளிக்கிழமை தொழுகையின் போது போலீசார் வீடுகளை இடித்துள்ளனர். யோகி அரசாங்கத்தின் கீழ், உத்தரபிரதேச முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் புல்டோசர் நடவடக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று குடியிருப்பாளர்களை அதிகாரிகள் மிட்டியுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த உள்ளூர் எம்எல்ஏ கர்தார் சிங் தன்வாரும் குடியிருப்பாளர்கள் சார்பாக இப்பிரச்னையில் தலையிட மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது என்கிறது உண்மை அறியும் குழு!
டிடிஏவின் நடவடிக்கை முஸ்லிம்-விரோத மற்றும் ஏழைகளுக்கு எதிரானது என்று கூறியுள்ள சிபிஐ எம்எல் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) குடியிருப்பாளர்கள் நீதிமன்றத்தை அணுகி இடிபுக்கு எதிரான தடை பெறவோ, நிவாரணம் பெறவோ எந்த முன் அறிவிப்பையும் வழங்க டிடிஏ மறுத்துள்ளதை கண்டித்துள்ளது.
மேலும்,
“போலிஸின் கொடூரமான நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம். முன்னறிவிப்பு இன்றி இனியும் இடிக்கக் கூடாது ; இந்த திடீர் இடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்; பெண்களைத் தாக்கிய குற்றவாளிகள் காவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்” என்று சிபிஐ எம்எல் தில்லி பிரிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Comments
Post a Comment