முஸ்லிம் வழக்கறிஞரை படுகொலை செய்த போலீசுக்கு ஆயுள் தண்டனை!
முஸ்லிம் வழக்கறிஞரை படுகொலை செய்த
போலீசுக்கு ஆயுள் தண்டனை!
நபி அஹ்மது என்ற வழக்கறிஞரை சுட்டுக் கொன்ற வழக்கில் சப். இன்ஸ்பெக்டர் சைலேந்திர சிங்கிற்கு உத்திரப்பிரதேச ரேபரேலி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு, அலஹாபாத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்தில் இந்த படுகொலை நடந்திருக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த
இன்னொருவரான ராஷித் சித்திக்கை நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.
“அரசுத் தரப்பின் சாட்சியங்களாக இந்த வழக்கில் 10 பேர் நீதிமன்றத்தில்
விசாரிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட ராஷித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர் பிணையில் வெளியே இருந்து வந்தார்” என்கிறார் அரசு தரப்பு வழக்கறிஞரான அஜய் மவ்ரியா. சப்-இன்ஸ்பெக்டர் சைலேந்திரசிங் ரேபரேலி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
![]() |
| இன்ஸ்பெக்டர் சைலேந்திர சிங் |
கடந்த மார்ச் 11, 2015 தனது சர்வீஸ் பிஸ்டலை வெளியே எடுத்த சைலேந்திரகுமார்மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்திலேயே நபி அஹ்மதை நோக்கி சரமாரியாகசுட்டிருக்கிறார். இத்தனைக்கும் இவருக்குமிடையில் முன் விரோதம் பின்விரோதம் என
எதுவும் இல்லை. நீதிமன்ற வளாகத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.வாக்குவாதம் முற்றிய நிலையில் துப்பாக்கியை நீட்டி இருக்கிறார் சைலேந்திரசிங். நபிஅஹ்மது மீது குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருக்கிறார். விடுதலை செய்யப்பட்ட ராஷித் சம்மந்தப் பட்ட வழக்கில் அவருக்கு சைலேந்திரசிங் உதவினார் என்பதுதான் நபி
அஹ்மதின் குற்றச்சாட்டாக இருந்திருக்கிறது.
முதலில் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு, பின்னர் அலஹாபாத்
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ரேபரேலி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.
-ஹிதாயா.

Comments
Post a Comment