உத்திரகாண்ட் :இளம் பெண்ணை விபச்சாரத்திற்கு நிர்பந்தித்து கொலை செய்த பாஜக தலைவரின் மகன் !

வானதாரா ரிசார்ட்
உத்திரகாண்ட் :இளம் பெண்ணை விபச்சாரத்திற்கு நிர்பந்தித்து
கொலை செய்த பாஜக தலைவரின் மகன் !



உத்திரகாண்ட் மாநில பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர்
வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா, ரிஷிகேஷுக்கு அருகில் பவ்ரி மாவட்டத்தில் உள்ள அவருக்கு சொந்தமான ரிஸார்ட்டில் ரிசப்ஷனிஸ்டாக பணியாற்றிய இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று படுகொலை செய்திருக்கிறார்.

இந்த சம்பவம் வைரலாகி பொதுமக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு
வெளிப்பட்டவுடன் பிஜேபி தலைமை வினோத் ஆர்யா மற்றும் அவரது மூத்த மகன் (கொலையாளியின் அண்ணன்) ஆகிய இருவரை கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளது.வினோத் ஆர்யா உத்திரகாண்ட் மாநிலத்தின் மட்டி சுலா (மண் பாண்டங்கள் செய்யும்கைவினைஞர்கள்) வாரியத்தின் தலைவராக இருந்து வந்திருக்கிறார். இது, மாநில அமைச்சருக்கு இணையான அந்தஸ்து கொண்ட பதவியாகும்.

அதேபோல, குற்றவாளியான புல்கிட்டின் அண்ணன் அங்கிட் ஆர்யா மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தவர்.
முன்னதாக, கடந்த செப். 22 அன்று புல்கிட் ஆர்யாவினால்  ரிஸார்ட்டின் ரிசப்ஷனிஸ்டான அங்கீதா பண்டாரி படுகொலை செய்யப்பட்ட ரிஸார்ட்டின் ஒரு பகுதியை மாவட்ட நிர்வாகம் புல்டோசரைக் கொண்டு இடித்தது. கோபமடைந்த உள்ளூர் மக்கள் கடந்த செப். 24ம்தேதி, ரிஸார்ட்டின் பல பகுதிகளுக்கு தீ வைத்தனர்.

புல்கிட் ஆர்யா -அங்கீதா  பண்டாரி


ரிஷிகேஷ் என்ற முக்கிய நகரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் இந்த ரிஸார்ட்
அமைந்திருக்கிறது. 

கொலை யாளியான புல்கிட் ஆர்யாவைத் தவிர ரிஸார்ட்டின் மானேஜரான சவ்ரவ் பாஸ்கர், உதவி மானேஜரான அங்கிட் குப்தா ஆகியோரும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக் குற்றத்தை இவர்கள் ஒப்புக்கொண்டதாக போலீஸ் கூறுகிறது.

ரோஹினி சிங் என்ற சமூக ஆர்வலர் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஆஷிஷ் மிஷ்ரா காரைஏற்றி விவசாயிகளை கொல்ல முடியும். ஏனென்றால் அவரது தந்தை சக்தி வாய்ந்தபிஜேபி அமைச்சர். புல்கிட் ஆர்யா விபச்சாரியாக மாற மறுத்த இளம்பெண்ணை படுகொலை செய்ய முடியும். ஏனெனில் அவரது தந்தையும் சக்திவாய்ந்த பிஜேபி தலைவர்.இருவருக்குமே நன்கு தெரியும் இதனால் (கொலைகளால்) எந்த விளைவும் ஏற்படாது என்று" அதிகாரம் என்பது விஷம் ஆகும் ” என பதிவிட்டிருக்கிறார்.

அங்கிட் ஆர்யா-வினோத் ஆர்யா

   குற்றவாளியின் தொடர்புகள்           ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபியோடு  இருப்பதால் போலீஸ்
இந்த சம்பவத்தில் மெத்தனம் காட்டுகிறது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
“இது கொடூரமானது. இளம்பெண் அங்கீதா பண்டாரி செப்டம்பர் 18ம் தேதியே காணாமல் போயிருக்கிறார். போலீஸ்  செப்டம்பர் 21ம் தேதி தான்  

எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது ஏன் ?” எனக் கேள்வி எழுப்புகிறார் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கரிமா மெஹ்ரா தசவ்னி.

“பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் இந்த கேவலமான அதிகார துஷ்பிரயோகங்கள் எப்போது வரை தொடரும்?” என்றும் கேட்கிறார் கரிமா. அங்கீதா பண்டாரியின் தந்தை, பாலியல் துன்புறுத்தலுக்கு தனது மகள் ஆளாக்கப்பட்டதாகவும் அந்த சம்பவத்தின் ஆடியோ பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் கூறுகிறார். அருகிலுள்ள கால்வாயிலிருந்து அங்கீதாவின் உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

குற்றவாளியான புல்கிட் ஆர்யா, அங்கீதா பண்டாரியை விபச்சாரத்திற்கு
நிர்பந்தித்திருக்கிறான் என்ற குற்றச்சாட்டுகளை அங்கீதா தனது தோழிக்கு
அனுப்பிய வாட்ஸ் அப் செய்திகள் மூலம் உறுதியாகிறது என்று என்.டி. டிவி கூறுகிறது.

அவர்கள் என்னை விபச்சாரியாக்க முயற்சித்தனர்- இது அங்கீதா தனது தோழிக்க அனுப்பிய வாட்ஸ் அப் செய்திகளில்  ஒன்று!


-ஃபைஸ்.






Comments