சத்திய மேவ ஜெயதே !


 சத்திய மேவ ஜெயதே !

 

பதினைந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசதிலுள்ள பாப்புலர் பிராண்ட் ஆப்  இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்துறை அமைச்சகத்தின்  கைப்   பாவையாக உள்ள பாதுகாப்பு அமைப்புகளான என் ஐ ஏ என்று அழைக்கப்படுகின்ற தேசிய புலனாய்வு முகமை மற்றும் இ.டி என சுருக்கமாக அழைக்கப்படும் அமலாக்கத்துறை மற்றும் மாநிலக் காவல்துறை  ஆகியவை இணைந்து சோதனைகளை நடத்தியுள்ளன. அந்த அமைப்பின் சில தலைவர்களையும் கைது செய்திருக்கின்றன.

ஒன்றிய அரசின் இந்த செயலை  இஸ்லாமிய கட்சிகள் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயகத்தில் நபிக்கையுள்ள சமூக அமைப்புகள் கண்டித்துள்ளன. சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இயங்கும் நெட்டிசன்கள் கூட கடுமையாக  கண்டித்திருக்கின்றனர். ஒன்றிய அரசின் இந்த செயல் முஸ்லீம் சமூகத்தையும் இஸ்லாமிய அமைப்புகளையும் அச்சுறுத்துவதாகும்  என அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
என் ஐ ஏ மற்றும் அமலாக்கத்துறை, பாப்புலர் பிராண்ட் அமைப்புக்கு  வெளிநாட்டில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருக்கிறது; இளைஞர்களை பயங்கரவாத அமைப்புகளுக்கு அது தேர்வு செய்கின்றது; பல்வேறு சமூக குழுக்களுக்கு மத்தியில் விரோதத்தை உண்டாக்கி வருவதன் மூலம் அது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறத;;. தேசத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றது என்றும் அரபு நாடுகளிலிருந்து 120  கோடி ரூபாய்கள் வரை நிதி திரட்டி, அதனை 2020  தில்லி வகுப்பு கலவரத்திற்கும் பிரதமர் நரேந்திர மடியின் பாட்னா  விஜயத்தின் போது  இடையூறு ஏற்படுத்த அது ஏற்பாடு செய்த பயிற்சி முகாமிற்கும் பயன்படுத்தியுள்ளது என்றெல்லாம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கேரளாவின் என் ஐ ஏ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிமாண்ட் ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளது.

இரண்டு பாதுகாப்பு அமைப்புகளும் கூறும் குற்றச்சாட்டுகளை பாப்புலர் பிராண்ட் அமைப்பின் தலைவர்கள் மறுத்துள்ளனர் இதனை ஜனநாயகவழியிலும் சட்ட ரீதியாகவும் நாங்கள் எதிர்கொள்வோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர் .பாதுகாப்பு அமைப்புகள் இரண்டும் தமது குற்றச்சாட்டுக்களுக்கு உறுதியான ஆதாரங்களை  நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்  வேண்டும் நீதிமன்றம் அதன் மீது முடிவு எடுக்கட்டும். அதே சமயம் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் இரண்டு பாதுகாப்பு அமைப்புகளும் சொல்லும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைந்திருந்ததா என்பதையும் இத்தருணத்தில் நாம் கவனப்படுத்தவேண்டியுள்ளது .

ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளைப் போல  பாப்புலர் பிராண்ட் அமைப்பு சமூகக் குழுக்களுக்கு மத்தியில் பிளவுகளை உண்டு பண்ணவோ, வகுப்பு மோதல்களைத் தூண்டவோ , மதக்கலவரங்ளை உண்டாக்கவோ, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கோ, ஏனைய பிற சமூகங்களின் மீது தாக்குதல்கள் நடத்தவோ, மத வெறுப்புணர்வுகளைத் தூண்டிவிடவோ, பிற சமயத்தவருக்கும் எதிராக இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கவோ , சாதிய மோதல்களைத் தூண்டிவிடவோ , ஒடுக்கப்பட்ட , ஓரங்கட்டப்பட்டு மக்கள் மீதான வன்முறைக்கோ, பெண்கள் மீதான பாலியல் பலாத்காரத்திற்கோ காரணமாக இருந்ததில்லை. இப்படிப்பட்ட சம்பவங்களில் ஒன்றில் கூட  அது ஈடுபட்டதாக  பதிவுகளைக்  காண முடியாது. கூகுள் தேடு பொறியில் தேடிப்பார்த்தால் நாம் மேலே பட்டியலிட்ட அத்தனை  அசம்பாவித சம்பவங்களிலும் எந்த அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர் என்பதை எவரும் அறிந்து கொள்ள முடியும்.



பாசிசத்திற்கு எதிராக களமாடி ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி வந்திருக்கிறது பாப்புலர் பிராண்ட் . மதசார்பின்மை  தத்துவத்தில் நம்பிக்கை வைத்து  மத நல்லிணக்கத்தை, நாட்டின் பன்முகத்தன்மையை ,  அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடு பட்டு வந்திருக்கிறது. கொடி அணிவகுப்பை நடத்தி தேசப்பற்றை விதைத்து வந்திருக்கிறது. பேரிடர் காலங்களில் மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவிகளை செய்து வந்திருக்கிறது. இஸ்லாமியர்கள் மாத்திரமல்லாமல் பிற சமயத்தவர்களும் இந்த அமைப்பின் தலைமைப்பொறுப்பில் இருந்து வருகிறார்கள். ஜனநாயக வழியில் வெளிப்படையாக இயங்கி வரும் அமைப்பு தான் பாப்புலர் பிராண்ட் என்பதாகத்தான் இது வரை அது சமூகத்தில் அடையாளமாகியிருக்கிறது.

பாப்புலர் பிராண்ட் மீதான இது போன்ற குற்றச்சாட்டுக்கள் புதிதல்ல பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அந்த அமைப்பை முடக்கவேண்டும் என்ற முயற்சியை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்தே வந்திருக்கிறது. பிஜேக ஆளுகின்ற பல மாநிலங்கள் பாப்புலர் பிராண்ட் மீது அவ்வப்போது இது போன்ற குற்றச்சாட்டுக்களை முன் வைத்தே வந்திருக்கின்றன அந்த அமைப்பை தடை செய்ய முனைப்புகள் காட்டி வருகின்றன. தேசிய அளவில் இயங்கிவரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் எதிர்கட்சித்தலைவர்களை காட்டிலும் பாப்புலர் பிராண்ட் அமைப்பைக் கண்டு ஒன்றிய அரசு அஞ்சுவதால் தான் இத்தகைய அடக்குமுறைகளை அது அவ்வப்போது ஏவி வருகிறது. இதற்கு காரணம் , அகில இந்திய அளவில் பிரமாண்டமான வளர்ச்சியைக் கண்டு வரும் பாப்புலர் பிராண்ட் அமைப்பு பாசிசத்திற்கு எதிரான ஜனநாயக  சக்திகளை , ஜனநாயக இயக்கங்களை ஒருங்கிணைத்து வருகிறது;அடக்குமுறைக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களையும் அணிதிரட்டி வருகிறது.

மக்கள் நலனில் ,  மக்கள் பிரச்சினைகளில்.  சமூக களத்தில், மனித உரிமை தளத்தில் முதல் ஆளாய் நிற்கிறது. இதுவெல்லாம் ஆபத்தாக நினைக்கும் ஒன்றிய அரசு   பாப்புலர் பிரண்ட் அமைப்பை நசுக்குவதற்காக  மோசமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்கள் மத்தியில் இருந்து அதை அப்புறப்படுத்த நினைக்கிறது. அரசியல் சாசனத்தை போற்றுகின்ற எந்த அமைப்பும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடாது. ஆயிரம் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினாலும்  அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்  என்று துணிச்சலோடு சொல்லுகிற ஒரு இயக்கம் சட்டத்திற்கு விரோதமாக செயல்படவேண்டிய தேவை இல்லை. அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. ஒன்றிய அரசுக்கு புரிகிற பாஷையில் சொல்லவேண்டுமென்றால் சத்திய மேவ ஜெயதே !

Makkal Report 

oct 1-7,2022



Comments