முஸ்லீம் வெறுப்பு :
கோவில் வளாகத்தில் முஸ்லீம் கடைகள் கூடாது
அராஜகம் செய்யும் இந்து ஜாக்ரான் மஞ்ச்!
மத்தியப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருகிறது என்பதற்கு கடந்த செப் 30 அன்றைய சம்பவத்தை உதாரணமாகச் சொல்கிறார்கள் இந்தூர் நகர மக்கள். இந்தூரில் உள்ள இந்துக் கோயில் வளாகத்தில் சில முஸ்லிம்களும் கடை போட்டிருந்தார்கள் அவர்கள் கடைகளை அகற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்து ஜாகரன் மஞ்ச் என்ற வலதுசாரிக் குழுவைச் சேர்ந்தவர்கள் கடைக்காரர்களின் அடையாள அட்டைகளைச் சரிபார்க்கத் தொடங்கிய சம்பவம் இந்தூரில் உள்ள பிஜாசன் கோயிலில் நடந்தது. இப்படி அடையாளங்களை சரி பார்க்கும் நிலையில் ஒருவர் முஸ்லீம் என தெரியவந்திருக்கிறது. உடனே அவர்கள் அவருடைய கடையை அகற்றும்படி வற்புறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில் ,
இந்து ஜாகரன் மஞ்ச்சின் உறுப்பினர்கள் அந்த முஸ்லீம் கடைக்காரரிடம் தனது உடைமைகளை மூடிவிட்டு வெளியேறும்படி கேட்பதை பார்க்க முடிகிறது . அந்த குழுவைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் அந்த நபரிடம் அவரது பெயரைக்கேட்கிறார், அதற்கு அவர் "முகமது சலீம்" என்று பதிலளிக்கிறார்.அவரைக் கவனித்த ஜாக்ரான் குழுவினர் , சலீமையும் மற்ற முஸ்லீம் கடைக்காரர்களையும் கோவில் வளாகத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துகின்றனர்.
இந்த சம்பவத்தை பார்த்த சகா முஸ்லீம் கடைக்காரர்கள் கோவில் வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த முஸ்லீம் வெறுப்பு குறித்து ஆர்வலர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ காட்சிகளுடன் பதிவிட்டு டிஜிபி மற்றும் மாநில அரசுக்கு ஹேஷ்டாக் செய்துள்ளனர். இதற்கெல்லாம் செவி சாய்க்கப் போகிறதா அரசு ?
--


Comments
Post a Comment