லக்னோ: சிவாலயா மஸ்ஜித் இந்து கோவில் தான்! -புதிய பிரச்னையை கிளப்பும் இந்துத்வா!! லக்னோ  சிவாலய மஸ்ஜித் இந்துக் கோயிலின் மீது கட்டப்பட்டதாகக் கூறி இந்து மகாசபை  புகார் அளித்ததை அடுத்து லக்னோ மேம்பாட்டு ஆணையம் (எல்டிஏ) விசாரணையைத்  தொடங்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கியான் வாபி  மஸ்ஜித்  விவகாரம் எழுந்ததையடுத்து, நாட்டின் பல பகுதிகளில்  கோவில்-மஸ்ஜித்  தொடர்பான சர்ச்சை விவாதத்தில் உள்ளது.  சமீபத்திய  வழக்கு லக்னோவின் ஹுசைங்கஞ்சில் அமைந்துள்ள ஒரு மஸ்ஜித். அது ஒரு கோவில்  என்று இந்துத்வாக்கள் கூறுகின்றன. பாஜக யுவமோர்ச்சாவின் தேசிய பொதுச்  செயலாளராக இருந்த அபிஜத் மிஸ்ரா இதனைத் தெரிவித்துள்ளார்.  பாஜக  தலைவர் அபிஜத் மிஸ்ரா கூறுகையில், இந்தியா முழுவதும் இதுபோன்ற 50,000  க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன, அவை இடிக்கப்பட்டு மஸஜிதுகள்  கட்டப்பட்டன.  ஹுசைங்கஞ்ச் காவல் நிலைய சரகத்திற்ஹ லகு உட்பட்ட பகுதியில்  கும்பத்துடன் கூடிய மஸ்ஜித் இருப்பதாகவும், அங்கு கும்பம் இருப்பதாகவும்,  அதனை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து முஸ்லிம் சமூகத்தினர் மஸ்ஜிதை   உருவாக்கியுள்ளனர். என்றும் க...